- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகாளய பட்சம் சோமவார பிரதோஷம்

மகாளய பட்சம் சோமவார பிரதோஷம்

- Advertisement -

தற்போது மகாளய பட்சமானது நடந்து கொண்டிருக்கிறது. நாளை மஹாளய பட்சத்தில் 13வது நாள்.  30.9.2024 திங்கட்கிழமையோடு பிரதோஷ திதியும் வந்திருக்கிறது. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய கிழமை. இதை சோமவார பிரதோஷம் என்று சொல்கிறார்கள். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடானது பித்ருக்களின் ஆசிர்வாதத்தையும் பெற்று தரும்.

அந்த ஈசனின் ஆசிர்வாதத்தையும் பெற்று தரும். ஆக மொத்தத்தில் நம்முடைய கர்ம வினைகளை கரைப்பதற்கு, கஷ்டங்களைப் போக்குவதற்கு இதை விட சிறப்பான நாள் நிச்சயம் நமக்கு கிடைக்காது. அது மட்டும் இல்லாமல் நாளை வரக்கூடிய பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் ஆயிரம் பிரதோஷங்கள் சிவபெருமானை வழிபாடு செய்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளைய தினம் நம்முடைய கஷ்டங்கள் தீர சிவபெருமானுக்கு எந்த பொருளை நெய்வேதியமாக வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சோமவார பிரதோஷ வழிபாடு

நாளைய தினம் திங்கட்கிழமை. காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி விரதத்தை தொடங்கவும். எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும் என்பவர்கள் இருக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் பலகாரம் பால்பழம் சாப்பிட்டும் விரதம் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பது உங்களுடைய விருப்பம். நாளை மாலை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். இந்த நேரத்தில் சிவன் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் கோவிலுக்கு செல்லும்போது காப்பரசி உங்கள் கைகளால் தயார் செய்து எடுத்து செல்லுங்கள். சிவனுக்கு ரொம்பவும் உகந்த நெய்வேத்தியம் இது. அதுவும் திங்கட்கிழமையில் வந்திருக்கும் பிரதோஷ தினத்தில் சிவபெருமானுக்கு காப்பரிசி நெய்வேதியம் செய்தால் அத்தனை நல்லது.

பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் வெல்லம் சேர்த்து, கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து, 1 ஸ்பூன் நெய் விட்டு கலந்தால் காப்பரிசி தயார். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிவபெருமானுக்கு கொண்டு போய் நெய்வேத்தியம் செய்து, அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் தானம் கொடுக்க வேண்டும்.

‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை மனதில் உச்சரித்து கொண்டு நாளை காப்பருசியை தானம் கொடுப்பவர்களுக்கு சகலவிதமான கஷ்டங்களும் தீரும். குறிப்பாக உங்களுக்கு கடன் சுமையால் பாதிப்புகள் இருந்தால், அதுவும், முற்பிறவியில் பிறவி கடனையும் தீர்க்கக்கூடிய பரிகாரம் இது.

நாளை தினம் மகாளய பட்சம் சேர்ந்து இருப்பதால் உங்களுடைய முன்னோர்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்து, அந்த காரணத்தால் உங்களுக்கு பிரச்சனைகள் வருகிறது என்னும் பட்சத்தில், அந்த பிரச்சினையை சரி செய்யவும் இந்த ஈசனை நாளை வழிபாடு செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் ஈசனை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்