- Advertisement -

குழந்தை பாக்கியம் கிடைக்க பங்குனி உத்திர வழிபாடு

- Advertisement -

ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம். அன்றைய நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய நாளில் வழிபாடு செய்பவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் காத்துக் கொண்டு இருப்பவர்கள் அன்றைய நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதோடு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காகவும் நாம் இந்த பங்குனி உத்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபாடு

திருமணம் நடக்காமல் இருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ பங்குனி உத்திர நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. மேலும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியமே இல்லை என்று வருத்தப்படுபவர்கள் பங்குனி உத்திர நாளன்று கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து முருகப் பெருமானுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பங்குனி உத்திர நாளன்று கணவனும் மனைவியும் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் முருகப்பெருமானின் வேல் அல்லது சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு பாலால் அபிஷேகம் செய்யலாம், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யலாம். பிறகு முகபெருமானுக்கு முன்பாக ஆறு வெற்றிலைகளை வைத்து ஆறு அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றலாம். அல்லது ஒரு அகல் விளக்கை பயன்படுத்தி நெய் தீபம் ஏற்றலாம்.

இப்படி தீபம் ஏற்றி வைத்துவிட்டு முருகப்பெருமானுக்கு பிடித்தமான சக்கரை பொங்கலை வைக்க வேண்டும். பிறகு முருகப் பெருமானுக்கு உகந்த இந்த ஒரு பாடலை கணவன் மனைவி இருவரும் ஒருசேர சேர்ந்து ஆறு முறை பாட வேண்டும். இப்படி பாடுவதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் முருகனைப் போலவே அழகான ஆண் குழந்தை விரைவிலேயே பிறக்கும் என்று புராணங்களில் சான்றுகள் கூறப்பட்டு இருக்கிறது. முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து பின்வரும் இந்த பாடலை ஆறு முறை பாடி முருகனைப் போலவே அழகான அறிவான குழந்தை பெற வேண்டும் என்று முழு மனதோடு வேண்டுபவர்களுக்கு விரைவிலேயே முருகனின் அருளால் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த …… தனதான

……… பாடல் ………

“செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே.”

- Advertisement -

பொருள்:

உலக மாயையில் உற்று, என் மனைவியின் கர்ப்த்தில் ஊறி, பத்து மாதங்கள் நிறைந்தவுடன், குழந்தையாகத் தோன்றி, நான் உன்னை உச்சி மோந்து, கண்களில் ஒற்றி, முகமோடு முகம் வைத்துக் களிக்கும்படி, என் புயங்களில் நீ உறவாடி, உனது திருவாயால் முத்தம் அளித்து அருள வேண்டும். முக வசீகரம் கொண்ட வள்ளியை அணைந்த நீதிமானே. ஒப்பற்ற வேதங்களின் உட் பொருளைச் சிவபெருமானுக்கு உரைத்தவரே. தடையொன்றும் இன்றி, அடியேனுக்கு உன் திருவடி தரிசனத்தைத் தந்த திருவேரகத்தின் முருகனே. காவரியின் வட பாகத்தில் போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே. மணி வாயில் முத்தி தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பங்குனி கடைசி வெள்ளி வழிபாடு
பங்குனி உத்திர நாளன்று இந்த பாடலை ஆறு முறை பாடுவதைப் போலவே ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சஷ்டி திதி அன்றும் இந்த பாடலை தொடர்ச்சியாக பாடி வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே முருகனின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -