- Advertisement -

குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிபாடு

- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சனிப்பெயர்ச்சியால் பாதிப்புகள் உண்டாகும். நல்ல பலன்களை தந்தாலும் தராவிட்டாலும் சனீஸ்வர பகவானை நாம் முழுமனதோடு வழிபாடு செய்தோம் என்றால் அவரின் அருளால் நல்ல வாழ்க்கையே அமையும். யார் ஒருவர் சனீஸ்வர பகவானை தொடர்ச்சியாக வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நேர்மையான எண்ணம் தோன்றும், சிறந்த உழைப்பாளியாக திகழ்வார்கள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் கஷ்டப்பட்டு முன்னேற கூடிய ஆற்றல் அவர்களுக்கு உண்டாகும், அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானை எப்படி வழிபட்டால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிபாடு

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் அவர்களின் குழந்தைகள் சிறப்பாக வளர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் தான் இருப்பார்கள். அதற்காக பலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு அவர்களின் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக நிலைகளால் எவ்வளவு முயற்சி செய்தாலும் நன்றாக படிப்பதோ அல்லது பெற்றோர்களின் சொல் பேச்சு கேட்டு நடப்பது போன்ற விஷயங்களில் பிரச்சனைகள் உண்டாகும். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சனிப்பெயர்ச்சி நாளன்று சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யும் முறை.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிப்பெயர்ச்சி நாளன்று செய்யத் தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் தங்களால் இயன்ற அளவு தொடர்ச்சியாக செய்து கொண்டே வருவதன் மூலம் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இதற்கு அருகில் நவகிரகங்கள் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சனிப்பெயர்ச்சி நாளன்று செல்ல வேண்டும். ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

ஆலயத்திற்கு செல்லும் பொழுது சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நிற துணி அல்லது கருநீல துணியை வாங்கி தர வேண்டும். அவருக்கு வஸ்திரம் சாத்துவதற்கு எவ்வளவு நீளம் வேண்டும் என்பதை கேட்டு வாங்கித் தர வேண்டும். அதேபோல் சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மலர்கள் என்பது மிகவும் பிடிக்கும். இந்த கருங்குவளை மலர்களையும் வாங்கி கொடுத்து சனீஸ்வர பகவானுக்கு சாற்ற சொல்ல வேண்டும். அடுத்ததாக அன்றைய தினம் அவருக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலவில்லை என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம். இதற்கு மாலை நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது 9 புதிய அகல் விளக்குகளை வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக கருப்பு எள் உருண்டையை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளோடு மட்டுமல்லாமல் நவகிரகங்களின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

இதையும் படிக்கலாமே:காகத்திற்கு வைக்க வேண்டிய உணவு

சனிப்பெயர்ச்சி நாளன்று இந்த முறையில் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்து தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -