- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாகத்திற்கு வைக்க வேண்டிய உணவு

காகத்திற்கு வைக்க வேண்டிய உணவு

- Advertisement -

பங்குனி மாதத்தின் 15 ஆம் நாள் மார்ச் மாதத்தின் 29ஆம் நாள் சனிக்கிழமை அன்று பங்குனி மாதத்தின் அமாவாசை திதி இருக்கிறது. அன்றைய தினம் சனிப்பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. சனிக்கிழமையோடு இவை இரண்டும் சேர்ந்து வருவது என்பது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் சனீஸ்வர பகவானின் வாகனமான காக்கைக்கு எந்த உணவை வைத்து வழிபாடு செய்தால் சனீஸ்வர பகவானின் அருளால் கஷ்டங்கள் ஏற்படாது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காகத்திற்கு வைக்க வேண்டிய உணவு

அன்றைய தினம் அமாவாசை என்பதால் பலரும் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து விதமான வழிபாடுகளையும் செய்வார்கள். எதுவுமே செய்ய இயலாதவர்கள் கூட அன்றைய தினம் மறவாமல் காக்கைக்கும், பசு மாட்டிற்கும் உணவு தானம் செய்வார்கள். வீட்டில் முன்னோர்களை நினைத்து சமைத்த உணவை காகத்திற்கு வைத்து காகம் எடுத்த பிறகு விரதம் இருக்கக்கூடிய நபர்கள் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். இப்படி பலரும் பல விதங்களில் அன்றைய தினத்தில் வழிபாடு செய்வது உண்டு.

- Advertisement -

காக்கை என்பது சனீஸ்வர பகவானின் வாகனம். அதனால் தினமும் நம் காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். மேலும் நம்முடைய முன்னோர்கள் காக்கையின் வடிவமாகவே வந்து நமக்கு அருள் பாலிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் தினமும் காக்கைக்கு உணவு வைப்பார்கள். அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் உணவு வைப்பதை வழக்கமாக பலரும் வைத்திருப்பார்கள். இதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் காக்கைக்கு உணவு வைத்த பிறகுதான் அவர்களுடைய விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

அப்படி நம் காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது மறக்காமல் ஒரு குறிப்பிட்ட உணவை வைக்க வேண்டும். ஏனென்றால் அன்றைய நாள் சனிக்கிழமை அதுவும் சனிப்பெயர்ச்சி நடக்கக்கூடிய நாள் சனீஸ்வர பகவானின் வாகனமாக திகழ்வதுதான் காகம் என்பதால் மறவாமல் இந்த உணவு கண்டிப்பான முறையில் காகத்திற்கு வைக்க வேண்டும். அதுதான் கருப்பு எள் கலந்த தயிர் சாதம் மற்றும் வாழைக்காய். இவை இரண்டையும் காகத்திற்கு வைப்பதன் மூலம் சனீஸ்வர பகவானின் பரிபூரண அருளை பெறுவதோடு முன்னோர்களின் ஆசியையும் பெறுவோம். இவர்கள் இருவரின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் ஏற்படாது. நன்மைகள் மட்டுமே உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:சனிப்பெயர்ச்சி அன்று செய்யக்கூடாதவை
எவ்வளவு உணவுகளை செய்தாலும் தனியாக காக்கைக்கு வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பிட்ட உணவை செய்து காக்கைக்கு வைத்து விட்டு வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் உண்ண சனீஸ்வர பகவானின் அருளும் முன்னோர்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்