- Advertisement -
ஜாதகம் பார்பது எப்படி

உங்கள் ஜாதகத்தில் ராகு முதலாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

ஜோதிடத்தில் பொதுவாக ராகு கிரகத்தை ஒரு பாப கிரகமாகவே சித்தரிக்கும் போக்கு அதிகமுள்ளது. ஆனால் இந்த ராகு கிரகம் ஒரு நபரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர் பெறக்கூடிய அனுகூலங்கள் அதிகம். மேலும் இந்த ராகு ஒரு நபரின் மனோநிலை மற்றும் வாழ்க்கைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவர். அப்படிப்பட்ட ராகு ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் பன்னிரண்டு வீடுகளில் “லக்னம்” எனப்படும் முதல் வீட்டில் இருப்பதால் ஏற்படும் பலன்களை பாப்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் எந்த ராசி ஒருவருக்கு லக்னம் ஆகிறதோ, அதுவே முதலாம் வீடு என கணிக்கப்படுகிறது. இந்த லக்னம் எனப்படும் முதலாம் வீடு ஒரு ஜாதகரின் முக தோற்றம், உருவ அமைப்பு மற்றும் ஆரோக்கியத்தை கூறும் வீடாகும். இந்த முதலாம் வீட்டிலேயே ராகு கிரகம் இருந்தால் அந்த நபர் சற்று பெரிய தலையை கொண்டவராக இருப்பார்.அகலமான முகத்தை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

- Advertisement -

ராகு பகவானின் ஆதிக்கம் கொண்ட இந்த நபர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெற கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இவர்கள் இருப்பதால் தர்க்க வாதங்களில் இவர்களை யாரும் வெல்ல முடியாது. எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். சுவை மிகுந்த உணவுகளை ருசித்து உண்பவர்களாக இருப்பர்.

வாழ்க்கையை அதன் முழுமையான தன்மையில் வாழ வேண்டும் என நினைப்பவர்கள். சுதந்திர சிந்தனையும் செயல்பாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராகு லக்னத்திலிருக்க பிறந்தவர்கள் சிறிது சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலுமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முற்படுவார்கள். சிற்றின்ப வேட்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறரின் கஷ்டத்தை பற்றியோ அவர்களின் வேதனை பற்றியோ துளியும் அக்கறை கொள்ளாதவர்கள். தனது காரியம் நிறைவேறுவதிலேயே குறியாக இருப்பர்.

- Advertisement -

ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார நிலை இருக்கும். இவர்களிடம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது. சற்று சோம்பேறித்தனமும் அதிகம் இருக்கும்.

பரிகாரம்:

ராகு லக்கினத்திலிருக்கும் போது ஏற்படும் தீய பலன்களை தடுக்க இவர்கள் தினந்தோறும் பறவைகளுக்கு உணவு கொடுப்பதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா படித்து வர வேண்டும்.

English Overview:
Here we described the good and bad of Rahu in 1st house in Tamil. This can be called as Lagnathil Ragu in Tamil.

- Advertisement -
Published by