- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

மகம் நட்சத்திரக்காரர்கள் அதிக செல்வம் பெறுவதற்கான பரிகாரங்கள்

மனித பிறவி எடுத்ததன் பயன் உயர்வான தெய்வீக நிலையான ஞான நிலை அடைவதாகும். மனிதர்களாக பிறக்கின்ற எல்லோராலுமே இத்தகைய உயரிய நிலையை அடைந்து விட முடியாது. ஒருவரின் ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப்படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே ஒருவர் ஞானம் அடைய முடியம். அந்த கேது பகவானின் ஆதிக்கத்தில் வருகின்ற மகம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் செல்வ அபிவிருத்திகளையும், சிறப்புகளையும் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திர வரிசைகளில் 10 வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரக நாயகர்களில் நிழல் கிரகங்களின் ஒருவரான கேது பகவான் ஆவார். மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று இந்நட்சத்திரத்தை பற்றிய ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில் இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் சாதாரண நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்நட்சத்திரகாரர்கள் தங்களின் வாழ்வில் பெற வேண்டிய செல்வ சேர்க்கையும், யோகங்களையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

மகம் நட்சத்திரகாரர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் தங்களின் பிறந்த நட்சத்திர தினத்தன்று கேது தலங்களான ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பாம்புரம் ஆகிய கோயில்களுக்கு சென்று கேது பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சித்தர்கள், ரிஷிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதி கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். சிவயோகிகள், ஞானிகள் போன்றோருக்கு அன்னதானம் இன்ன பிற தானங்களையோ அல்லது சேவைகளையோ செய்ய வேண்டும்.

நீங்கள் எக்காரணம் கொண்டும் பாம்புகளை துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. பாம்பு வசிக்கும் புற்றுகளையும் இடிக்க கூடாது. வருடந்தோறும் வரும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். தினமும் காலையில் மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது கேது பகவானின் அருளை உங்களுக்கு பெற்று தரும். வாழ்வில் எப்போதும் நன்மையான பலன்களை பெற தரமான வைடூரியம் கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து, உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
காலபைரவர் விரதம் முறைகள் மற்றும் பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Magam natchathiram pariharam in Tamil. It is also called Magam natchathiram in Tamil or Magam natchathiram adhipathi in Tamil or Magam natchathiram valipadu in Tamil or Magam natchathiram koil in Tamil.

- Advertisement -