- Advertisement -
சமையல் குறிப்புகள்

மேகியை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி நம்ம ஊரு ஸ்டைல்ல செஞ்சு பாருங்க

- Advertisement -

முட்டை மேகி | Muttai Maggi Recipe in Tamil

வீட்டில் நாம் என்ன தான் வகை வகையாக சமைத்தாலும் கூட, மேகி என்றால் குழந்தைகளுக்கு ஓரே கொண்டாட்டம் தான். இப்போது உள்ள குழந்தைகளுக்கு இந்த மேகியின் மீது அப்படி என்ன தான் ஒரு ஈர்ப்பு என்று தெரியவில்லை. இந்த மேகியை எப்போதும் போல ஒரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக நம்ம ஊரு ஸ்டைலில் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் தட்டை காலி செய்து விடுவார்கள். அந்த சுவையான மேகி ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் ஐந்து பல் பூண்டு சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு எண்ணெயில் வதங்கியவுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் வதங்கிய பிறகு ஒரு பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து, இரண்டு பழுத்த தக்காளியையும் (மீடியம் சைஸ் இருந்தால் போதும் ) பொடியாக நறுக்கி சேர்த்து விடுங்கள். இப்போது இத்துடன் ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள், அரை டீஸ்பூன் உப்பு இவை எல்லாம் சேர்த்து வெங்காயம், தக்காளி உடன் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இதை சேர்த்து வதக்கும் போது மட்டும் அடுப்பை லோ ஃபேளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம், தக்காளியுடன் இந்த மசாலாக்கள் அனைத்தும் வதங்கிய பிறகு, பேனில் வெங்காயம், தக்காளி ஓரமாக ஒதுக்கி விட்டு ஐந்து முட்டையை உடைத்து ஊற்றுங்கள். முட்டை ஊற்றி வதக்கும் போது அடுப்பை ஹை பிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். முட்டையை நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருந்தால் முட்டை பொடி மாஸ் செய்வது போல் தயாராகி விடும். அதன் பிறகு மசாலாவுடன் முட்டையை நன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்த முட்டை, வெங்காயம், தக்காளி சேர்த்த கலவையில் தண்ணீர் ஊற்றி அத்துடன் பெரிய பாக்கெட் மேகி மேகியை இரண்டாக உடைத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மேகியுடன் இருக்கும் மசாலாவையும் இதன் மேல் சேர்த்து தண்ணீருடன் மேகி மசாலா எல்லாம் நன்றாக கலக்கும் படி கலந்து விடுங்கள். அதன் பிறகு ஒரு ரெண்டு நிமிடம் பேனை மூடி விட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நல்ல காரசாரமா சாப்பிடணும் நினைக்கிறவங்க இந்த செட்டிநாட்டு காரச் சட்னி அரைச்சு சுடச்சுட இட்லியோட சாப்பிட்டு பாருங்க .மூணு வேலையும் இந்த இட்லி காரச்சட்னி இருந்தாலே போதும்ன்னு சொல்லுவீங்க.

இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, கொஞ்ச நேரம் கழித்து மூடியை திறந்தால் மேகி நன்றாக முட்டை மசாலா கலவையுடன் கலந்து உதிரி உதிரியாக நன்றாக வெந்து இருக்கும். இதை அப்படியே குழந்தைகளுக்கு எடுத்து பரிமாறி சுட சுட சாப்பிட கொடுங்கள் .

- Advertisement -