இந்த செட்டி நாட்டு காரச் சட்னியை நல்ல காரசாரமா அரைச்சு சுடச்சுட இட்லியோட வச்சி சாப்ட்டு பாருங்க

- Advertisement -

செட்டி நாட்டு காரச் சட்னி | Chettinad Kara chutney Recipe

இந்த இட்லிக்கு என்ன தான் சைடிஷ் செய்தாலும் அதற்கு கார சட்னி என்பது ஒரு தனி சுவை தான். சட்னியை பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அரைப்பார்கள். அந்த வகையில் இந்த காரச் சட்னி நாம் எப்போதும் செய்வது போல் இல்லாமல் செட்டி நாட்டு ஸ்டைலில் நல்ல காரசாரமாக அதே நேரத்தில் சுவையாகவும் செய்வது எப்படி என்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

இதன் பேரை செட்டிநாடு கார சட்னி தான் எனவே இது சற்று காரம் தூக்கலாக தான் இருக்கும். இதில் காரம் சேர்க்கும் போது நீங்கள் எடுத்திருக்கும் தக்காளியின் புளிப்புக்கு ஏற்றவாறு சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதில் புளியை நாம் சேர்க்கப் போவதில்லை. காரம் குறைவாக அரைத்தாலும் இந்த சட்னி சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்காது.

- Advertisement -

 செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் ஒரு துண்டு இஞ்சி சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 10 பல் பூண்டு, இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு 20 காய்ந்த மிளகாய் சேர்த்து அதுவும் வதங்கியவுடன் இரண்டு பெரிய சைஸ் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பாதி அளவுக்கு வதங்கியவுடன் மூன்று தக்காளியை நறுக்கி அதையும் சேர்த்த பிறகு கொஞ்சம் கறிவேப்பிலை கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு வதக்கியதை அப்படியே ஆற விடுங்கள்.

 

- Advertisement -

வதக்கிய வெங்காயம், தக்காளி ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் டீஸ்பூன் மிளகாய்த்தூளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், கருவேப்பிலை இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அதுவும் பொரிந்த உடன் அரைத்த சட்னியை அதில் சேர்த்து எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

 

இது ஏற்கனவே வதக்கி அரைத்ததால் மறுபடியும் அதிக நேரம் வதக்க வேண்டும் என்று அவசியமில்லை சேர்த்து லேசாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: இனி மசால் வடை செய்யனும்னா பருப்பே தேவை இல்லங்க. பருப்பு சேர்க்காமல் ஒரு சூப்பரான மசால் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?.

இந்த கார சட்னிக்கு சுட சுட இட்லி வைத்து சாப்பிட்டாலும் சரி அல்லது தோசை முடுதலாக செய்து தொட்டு சாப்பிட்டாலும் சரி சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -