- Advertisement -
- Advertisement -

இன்னும் ஒரு சில நாட்களில், மாசி மாதத்தில் மகாசிவராத்திரி ஆனது வரவிருக்கிறது. இந்து சாஸ்திரத்தின் படி நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகையான சிவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. இந்த ஐந்து சிவராத்திரிகளில் மற்ற சிவராத்திரி வழிபாடுகளை நாம் மேற்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை.

இந்த மகா சிவராத்திரியில் மட்டுமாவது சிவபெருமானை கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கே உரிய இந்த மாஹா சிவராத்திரி வழிபாடு, இந்த மாசி மாதம் எந்த நாளில் வரவிருக்கிறது. வழிபாட்டுக்குரிய முறைமைகள், மந்திரம் என்னென்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் கண்விழித்து நான்கு ஜாம பூஜையில் கலந்து கொண்டு, சிவனுக்கு உண்டான அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ மந்திரத்தை உச்சரித்து சிவனது பாடல்களை பாடி, விரதம் இருந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் சிவராத்திரி வழிபாட்டை எல்லோராலும் முறையாக கடைபிடிக்க முடியாது. இன்றைய கால சூழ்நிலையில் வேலை பளு காரணமாக, இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. விரதம் இல்லாதவர்கள், வழிபாட்டை கண்விழித்து செய்ய முடியாதவர்களுக்கு ஒரே ஒரு சின்ன மந்திரம், ஒரு வரி மந்திரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மந்திரத்தை 5 நாட்கள் தொடர்ந்து சொன்னாலே போதும். சிவபெருமானை, சிவராத்திரி அன்று கண் விழித்து வழிபாடு செய்த புண்ணியமும், நான்கு ஜாம பூஜையில் கலந்து கொண்டு சிவனின் அபிஷேகத்தை பார்த்த புண்ணியமும் கிடைக்கும்.

- Advertisement -

மாசி மாதம் 14ஆம் தேதி, பிப்ரவரி மாதம் 26.2.2025 புதன்கிழமை அன்று மகா சிவராத்திரி திதியானது வரவிருக்கிறது. இன்றிலிருந்து கணக்கு எடுத்துப் பார்த்தால் வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் 5 நாட்கள் இருக்கிறது. புதன்கிழமை ஆறாவது நாள் மகா சிவராத்திரி. இன்று தொடங்கி 5 நாட்கள் சிவபெருமானுக்காக மனதார விரதம் இருந்து, தினமும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வாருங்கள்.

மகா சிவராத்திரி அன்று அந்த சிவபெருமானின் தரிசனம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். விரதம் இருப்பது என்றால், உங்களுடைய வேலையை எல்லாம் தவிர்த்து விட்டு, பூஜை புனஸ்காரங்கள் செய்து கோவிலுக்கு சென்று தான் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அன்றாடம் வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையை திறந்து விளக்கு கூட ஏற்ற வேண்டாம்.

- Advertisement -

அந்த ஈசனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு அன்றாட வேலையை துவங்குங்கள். இறைவனுக்காக ஒரு 15 லிருந்து 20 நிமிடம் கூட ஒதுக்காமல் இறைவனின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஏதாவது ஒரு முயற்சியை நாம் மேற்கொண்டால்தான் இறைவன் நமக்கான நல்ல வழியை காட்டுவான் நான் சொல்ல வேண்டிய அந்த ஒரு வரி சிவ மந்திரம் என்ன தெரியுமா.

மகா சக்தி வாய்ந்த சிவ மந்திரம்

ஓம் சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ !
ஓம் சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ !
ஓம் சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ !

இந்த மந்திர வரி, பாடல் வரிகளாகவே ஒலிக்கப்படும். இன்று முதல் இந்த பாடல்வரிகளை உங்களுடைய வீட்டில் ஒலிக்கவிட்டாலும், அந்த சிவன் அருள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். இருப்பினும் நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்தி நம்முடைய வாயால் இந்த மந்திரத்தை சொல்ல துவங்கி விட்டால் மிக மிக அற்புதமான பலனை நான் பெறலாம். அந்த சிவனை நாம் சென்று அடைவதற்கு இந்த மந்திரம் உங்களுக்கு வழியே ஒரு வழியை காட்டித் தரும்.

சிவராத்திரிக்கு உங்களால் எந்த வழிபாடும் செய்ய முடியவில்லை என்று கவலையே படாதீங்க. இன்றிலிருந்து சிவனை மனதில் நிறுத்தி அடுத்தவர்களை பற்றி சிந்திக்காமல், இந்த மந்திரத்தை சொல்ல துவங்குங்கள். மனதில் எந்த கெட்ட எண்ணமும் நிற்காது. மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களும் அழிந்து போகும்.

இந்த ஒரு வரி மந்திரம் உங்களை நேராகக் கொண்டு போய் சிவனிடம் சேர்த்து விடும். இன்றிலிருந்தும், நாளையிலிருந்து கூட உங்களால் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதா. கவலையே படாதீங்க. வரும் திங்கட்கிழமை சோமவாரம், வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் தேதி பிரதோஷம் இப்படி ஈசனுக்கு உகந்த நாட்கள் வரிசையாக வருகிறது. அந்த குறிப்பிட்ட நாட்களில் ஆவது இந்த மந்திரத்தை சொல்லி ஈசனின் பாதத்தை சரண் அடையலாம்.

இதையும் படிக்கலாமே: குழந்தை வரம் தரும் வெண்ணெய்

சிவராத்திரி அன்று சிவபெருமான் உங்களை சந்திக்க தயாராக உள்ளார். அதற்கு ஒரு கருவியாக தான் இந்த பதிவும், இந்த மந்திரமும் இன்று உங்களை வந்து சேர்த்திருக்கிறது. மந்திரத்தை உச்சரியுங்கள் சிவ தரிசனத்தை பெறுங்கள். அவன் கருணையால் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -