- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுழந்தை வரம் தரும் வெண்ணெய்

குழந்தை வரம் தரும் வெண்ணெய்

- Advertisement -

எவ்வளவோ கோவில்களுக்கும், மருத்துவமனைக்கும் சென்று அலைந்தாலும் கிடைக்காத மழலைச் செல்வம், ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கும் போது விரைவில் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருந்து மக்களுக்கு அருள்பாளித்தவர். குழந்தையாக அவர் செய்யும் சேட்டைகளும், குறும்புகளும் பக்தர்களை கவர்ந்திழுக்கும். அந்த பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணரே உங்களுக்கு குழந்தையாக வரம் பெற, அவரை எப்படி வெண்ணெய் வைத்து வழிபடுவது? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த குறிப்பின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெய் பிரியர் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். வெண்ணெய் இருந்தால் போதும் எங்கிருந்தாலும் உடனே ஓடி வந்து விடுவார். இந்த வெண்ணைக்கு பின்னால் மிகப்பெரும் தத்துவம் உண்டு. கோகுலத்தில் வளர்ந்து வந்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு அங்கு கேட்டால் கிடைக்காதது என்று எதுவுமே இல்லை, இருப்பினும் மற்றவர்கள் இல்லத்தில் வெண்ணெயை திருடி சாப்பிட்டால் தான் அவருக்கு இன்பமே கிடைக்கும்.

- Advertisement -

பால், தயிர் என்று ஏராளமான பொருட்கள் கோகுலத்தில் இருந்தாலும், அவர் வெண்ணெயை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன்? வெண்ணெய் மற்ற பொருட்களை போல அல்லாமல் எதனுடன் ஒட்டாமல் தனித்து நிற்கும் இயல்புடையது. தயிரில் இருந்து எடுத்த வெண்ணெய் மீண்டும் எதனுடனும் ஒட்டாமல் தனித்து இருக்கும். மற்ற பொருட்கள் நீருடன் கலந்தால் ஐக்கியம் ஆகிவிடும், ஆனால் வெண்ணெய் அப்படியே மிதக்கும்.

இதிலிருந்து வெண்ணெய் போல நாமும் உலகத்தின் மீது பற்று இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை குறிக்கவே கிருஷ்ணர் வெண்ணெய் பிரியராக பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட விளங்கினார். நீரிலேயே இருந்தாலும் தாமரை இலை மீது தண்ணீர் ஒட்டாமல் இருக்கும். அது போல உலகத்தில் குடும்பம், குழந்தை, உத்தியோகம், பொருள் ஈட்டுவது என்று எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாலும், இந்த உலகம் நிரந்தரமானது அல்ல! நிரந்தரமாக இருக்கக்கூடியது இறையருள் ஒன்றே ஆகும். இறைவனை அடைவதையே நிரந்தரம் என்று எண்ண வேண்டும்.

- Advertisement -

பற்று இல்லாமல் இருப்பது என்பது சன்னியாசத்தை குறிப்பது அல்ல! எல்லாம் நம்மிடம் இருந்தும் இன்பம், துன்பம் எதுவுமே நிரந்தரம் இல்லை, உலகம் நமக்கு நிரந்தரம் இல்லை, இறைவனை அடைவதே நாம் பிறந்ததன் தாத்பரியம் என்று உணர்வதே ஆகும் என்று வேதாந்தம் கூறுகிறது. இவ்வளவு விஷயங்களை கொடுக்கக்கூடிய இந்த வெண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணருக்கு வீட்டில் தினமும் வெள்ளி கிண்ணத்தில் வெண்ணெய் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சனிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயார் வழிபாடு

கிருஷ்ணரை மலர்களாலும், ரத்தினங்களாலும் அலங்கரித்து அவருக்கு நைவேத்தியம் படைக்க அவல், சீடை, முறுக்கு தயார் செய்து பின் வெள்ளி கிண்ணத்தில் அல்லது மண் பாத்திரத்தில் சுத்தமான வெண்ணெயை தயார் செய்து வைத்து மனதார கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து பிரார்த்திக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் கிருஷ்ணருக்கு பூஜை செய்யாமல் தினமும் கிருஷ்ணருக்கு வெண்ணெய் வைத்து கணவன் மனைவி இருவருமாக பிரார்த்தித்து வந்தால், விரைவிலேயே புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. நைவேத்தியம் படைத்த வெண்ணெயை கணவன், மனைவி இருவரும் பூஜைகள் முடிந்த பிறகு எடுத்து சமமாக சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர விரைவிலேயே கிருஷ்ணன் அருளால் அந்த கிருஷ்ணரே வந்து உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்.

சற்று முன்