- Advertisement -
- Advertisement -

பொதுவாக மாதாமாதம் வரும் சிவராத்திரியை காட்டிலும், மாசி மாதம் தேய்பிறை நாளில் வரக்கூடிய இந்த சிவராத்திரி, மகா சிவராத்திரியாக ரொம்பவும் விசேஷமாக விரதம் இருந்து கொண்டாடப்படுகிறது. வேண்டிய வரங்களை வேண்டியபடி பெறக்கூடிய இந்த மகா சிவராத்திரி, நாளை இவ்வாண்டு 2025 புதன் கிழமையில் வரப்போகிறது. அன்று ஈசனை வழிபடும் முறையும், நான்கு கால பூஜைகளை மேற்கொள்ளும் முறையும் பற்றி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.

மகா சிவராத்திரி 2025 விரதம் இருக்க வேண்டிய நேரம் :

மகா சிவராத்திரி 2025 இல் செவ்வாய்க்கிழமை 25/02/2025 இன்றைய தினம் பிரதோஷ விரதத்தை காலையில் இருந்து ஆரம்பித்து, மாலை வரையிலும் தொடர வேண்டும். பின்னர் 26/02/2025 புதன்கிழமை நாளை காலையில் இருந்து விரதத்தை கொண்டு, மாலையில் நான்கு கால பூஜைகள் செய்து மறுநாள் அதிகாலை வரை நீடித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

- Advertisement -

மகா சிவராத்திரி 2025 பூஜை மேற்கொள்ள வேண்டிய முறைகள் :

வேண்டிய வரங்களை அப்படியே சிவன் நமக்கு கொடுக்கக்கூடிய அற்புதமான இந்த மகா சிவராத்திரியில் சிவனை பரிபூரணமாக மனதில் நினைத்து விரதம் இருந்து பக்தியுடன் வழிபட வேண்டும். இந்த மகா சிவராத்திரியில் தெரியாமலும் விரதம் இருந்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு கிடைக்கப் பெறாத அற்புதமான பல வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவ மந்திரங்களை உச்சரித்து, சாதாரணமாக வீட்டில் விளக்கு ஏற்றி பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டு, மாலையில் கோவிலுக்கு சென்று வந்து பின் விரதத்தை முடித்து எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பின் புதன்கிழமையில் மகா சிவராத்திரி அன்று காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சிவ சிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, சிவ மந்திரங்களை உச்சரித்து தொடர்ந்து ஒரு மணி நேரம் ஆவது அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதல் கால பூஜை :
மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையை துவங்க வேண்டும். முதல் கால பூஜை பிரம்ம தேவர் சிவபெருமானுக்கு செய்வது ஆகும். இந்த நேரத்தில் சிவனுக்கு விளக்கு ஏற்றி வைத்து, பாசிப்பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் படைத்து, ஏழரை மணிக்கு பாலபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

இரண்டாம் கால பூஜை :
இரவு பத்து மணிக்கு இரண்டாம் கால பூஜையை துவங்க வேண்டும். இரண்டாம் கால பூஜை மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபடுவது ஆகும். இந்த நேரத்தில் பஞ்சாமிர்தத்தால் பத்தரை மணி அளவில் அபிஷேகம் செய்து, சிவனுக்கு பொங்கல், பாயாசம், கற்கண்டு ஆகியவற்றை நைவேத்தியம் படைத்து மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

மூன்றாம் கால பூஜை:
லிங்கோத்பவராக காட்சியளிக்க கூடிய இந்த மூன்றாம் கால பூஜையில் தாய் பார்வதி தேவி வழிபடக்கூடிய நேரம் ஆகும். நள்ளிரவு 12:00 மணி அளவில் இந்த பூஜையை மிக முக்கியமாக செய்ய வேண்டும். எள்ளு சாதத்தை தயார் செய்து நைவேத்தியம் படைத்து, லிங்கத்திற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின் வில்வத்தால் அர்ச்சனை செய்து, “ஓம் நமச்சிவாய” என்னும் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரியுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மகா சிவராத்திரி குலதெய்வ பரிகாரம்

நான்காம் கால பூஜை :
அதிகாலை நாலரை மணிக்கு கடைசி நான்காம் கால பூஜை தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைத்து சிவ பக்தர்களும் வழிபடக்கூடிய காலம் ஆகும். இந்த நேரம் வரை விழித்திருந்து சிவபெருமானை மனதில் நிறுத்தி பக்தியுடன் கரும்பு சாரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சுத்த சாதத்தை நெய் விட்டு நைவேத்தியம் படைத்து வழிபட்டு, மகா சிவராத்திரி விரதத்தை முறையாக முடிக்க வேண்டும்.

- Advertisement -