- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகா சிவராத்திரி குலதெய்வ பரிகாரம்

மகா சிவராத்திரி குலதெய்வ பரிகாரம்

- Advertisement -

நாம் எல்லோருக்குமே தெரியும். மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இரவு கண் விழிக்க வேண்டும். இப்படி செய்தால் முன் ஜென்ம பாவங்கள் கர்ம வினைகள் தீரும் என்பது. சிவ வழிபாடு மட்டுமே இந்த நாளுக்கு சொந்தமானதா என்று கேட்டால், கிடையாது. இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளும், மாசி மாத அமாவாசையும், குலதெய்வ வழிபாட்டிற்கும் உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் பரிபூரணமாக தேவை என்றால், இந்த மாசி மாத மகா சிவராத்திரி அன்று (26-02-2025), குலதெய்வத்தை கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும். எந்த முறையில் எல்லாம் நாளைய தினம் குலதெய்வத்தை வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

குலதெய்வ வழிபாடு

முதல் வழிபாடு மானசீகமாக, மனதார குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, பூஜையறையில் விளக்கேற்றி குலதெய்வமான நீதான் எங்களுடைய குடும்பத்தை காத்தருள வேண்டும். குலதெய்வம் எப்போதும் எங்கள் வீட்டில் தங்கி அருள் ஆசியை வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தாலே, குலதெய்வத்தின் பரிபூரண அருள் நாளை உங்களுக்கு கிடைத்துவிடும். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சிலபேர் குடும்பத்தில் குலதெய்வ கோபம், குலதெய்வ சாபம், குலதெய்வம் வீட்டில் இல்லை, குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை, தடையாக இருக்கிறது. வீட்டில் சுபகாரிய தடை என்ற பிரச்சனை எல்லாம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது. இந்த மாசி மாத மகா சிவராத்திரி அன்று அல்லது அடுத்த நாள் வரவிருக்கும் மாசி அமாவாசை நாள் அன்று உங்கள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தோடு செல்லலாம். உங்களுடைய அங்காளி பங்காளிகளை கூட்டிக்கொண்டு குலதெய்வ கோவிலுக்கு செல்வது இன்னும் இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக குலதெய்வ கோவிலுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் செய்யலாம். உங்கள் குலதெய்வ கோவிலுக்கு என்ன சிறப்பு.

அதை வாங்கி தானமாக கொடுங்கள். அம்பாள் என்றால் புடவை, ஆண் தெய்வங்களாக இருந்தால் அங்க வஸ்திரம் அல்லது சில தெய்வங்களுக்கு மிகவும் பிடித்த பொருட்கள் இருக்கிறது அல்லவா. அதுபோல ஏதாவது பொருட்கள் இருந்தாலும் நீங்கள் அந்த பொருட்களை, அந்த கோவிலுக்கு வாங்கிக் கொடுத்து பலனை பெற்றுக் கொள்ளலாம்‌.

- Advertisement -

நீங்கள் சொந்த ஊரில் இல்லை வெளியூரில் இருக்கிறீர்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்வது சிரமம் என்றால் உங்களுடைய குலதெய்வப் பெயரிலேயே உங்கள் ஊருக்குள் ஒரு தெய்வம் இருக்கும். பழனி முருகன் உங்கள் குலதெய்வம் என்றால், உங்கள் ஊரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று பழனி முருகனுக்கு ஒரு செவ்வரளி பூ வாங்கி கொடுத்து உங்கள் குடும்பப் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம். இது போல ஒரு வழிபாட்டு முறையும் நாளைய தினம் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது.

குலதெய்வ கோவிலுக்கு பணம் அனுப்ப முடியும். அங்கு தெரிந்தவர் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம் அனுப்பி வைத்தால் ஏதாவது பொருளை அவர் வாங்கிக் கொடுப்பார்கள் என்றாலும் அது படி குலதெய்வ கோவிலுக்கு ஏதாவது ஒரு பொருளை கொண்டு சேர்க்கலாம். இதுவும் ஒரு வழி. இதையெல்லாம் தாண்டி இறுதியாக ஒரு பரிகாரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தண்ணீரோடு தண்ணீராக கரைந்து காணாமல் போகும். அந்த குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி ஒரு கட்டி வெல்லம் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வெல்லத்தை வாங்கி உங்கள் குலதெய்வ கோவில் இருக்கும் குளத்திலேயே அந்த வெல்லத்தை கரைத்து விட வேண்டும். வாய்ப்பு இருக்கிறது என்றால் அந்த வெல்லத்தை தண்ணீரில், உங்கள் கையை கொண்டு கரைத்து விடலாம்.

குலதெய்வ கோவிலில் கிணறுதான் இருக்கிறது என்றால், வெல்லகட்டியை அந்த தண்ணீருக்குள் போட்டு விடுங்கள். எதுவுமே இல்லை என்றால் குலதெய்வ கோவிலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அந்த வெல்லத்தை அந்த தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை உங்கள் குலதெய்வ கோவில் மண்ணிலேயே கொட்டி விட்டு வருவது மிக மிக சிறப்பு.

குலதெய்வ கோவிலுக்கு போக முடியாது என்பவர்கள் உங்க ஊர் ஆத்தங்கரையிலேயே இந்த வெல்லத்தை வாங்கி குல தெய்வத்தின் பெயரைச் சொல்லி கரைக்கலாம். அதுவும் முடியாது என்பவர்கள் வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து ஒரு கட்டி வெல்லத்தை அந்த தண்ணீரில் போட்டு கரைத்து மண்பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 26-02-2025 மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

நாளை மகா சிவராத்திரி தினத்தில் வெல்லத்தை தண்ணீரில் யார் கையால் கரைக்கிறார்களோ, அவர்களுடைய துன்பம் தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போகும் என்பது நம்பிக்கை. வெல்லத்தை தண்ணீரில் கரைக்கும் போது, என்னுடைய கஷ்டமும் என்னுடைய நோய் நொடியும், துன்பமும், கடனும், இதுபோல தண்ணீரில் கரைந்து காணாமல் போக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை நினைத்து மேல் சொன்ன இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கூட முழு பலன் வந்து சேரும், என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்