- Advertisement -
- Advertisement -

ஒருவர் தான் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இப்படி வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பதற்குரிய முக்கியமான காரணம் அதன் மூலம் பணம் ஈட்ட வேண்டும் என்பதுதான். எவ்வளவு முயற்சி செய்தாலும் பணத்தை ஈட்ட முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு திலகத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தை தன்னிடமே வைத்துக் கொள்வதாக இருந்தாலும், அந்த பணத்தை அதிகளவில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு பண வசியம் என்பது வேண்டும். பணத்தை வசியம் செய்ய வேண்டும் என்றால் முதலில் பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரை நாம் வசியம் செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரை வசியம் செய்வதற்கு மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு திலகத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த திலகத்தை நாம் செய்வதாக இருந்தால் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையிலோ அல்லது தினத்திலோ தான் செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை உகந்த தினமாக திகழ்வது பௌர்ணமி. பௌர்ணமி தினத்தில் அல்லது வெள்ளிக்கிழமையில் இந்த திலகத்தை நாம் செய்யலாம். அவ்வாறு செய்யும்பொழுது சுக்கிர ஹோரை எந்த நேரத்தில் வருகிறது என்பதை பார்த்து தான் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமையை பொருத்தவரை காலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள்ளும், மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள்ளும், இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள்ளும் சுக்கிரஹோரை வரும். அதனால் இந்த நேரங்களை பயன்படுத்தி நாம் இந்த திலகத்தை தயார் செய்து கொள்ளலாம். பௌர்ணமி தினத்தன்று எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு ஏற்றவாறு சுக்கிர ஹோரையை பார்த்து நாம் இந்த திலகத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு முறை இந்த திலகத்தை நாம் தயார் செய்து கொண்டோம் என்றால் 48 நாட்கள் வரை இந்த திலகத்திற்கு சக்தி இருக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த திலகத்தை நம்முடைய நெற்றியில் வைத்துக் கொண்டு வருவதன் மூலம் நாம் பணம் சம்பாதிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் நமக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நம்மை தேடி பணம் வருவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். சரி இந்த திலகத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இந்த திலகத்திற்கு ஐந்து பொருட்கள் தேவைப்படும். ஏலக்காய் மூன்று, கிராம்பு ஐந்து, ஜாதிபத்திரி சிறிய துண்டு, பச்சை கற்பூரம் ஒரு துண்டு, சாதாரண கற்பூரம் ஒரு துண்டு இவை அனைத்தையும் இடிக்கலில் போட்டு ஒன்றிரண்டாக நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இடித்த இந்த தூளை ஒரு மண் அகல் விளக்கில் வைத்து பத்த வைக்க வேண்டும். இதில் நாம் கற்பூரம் சேர்த்திருப்பதால் இவை அனைத்தும் நன்றாக எரிந்து கறியாக மாறிவிடும்.

- Advertisement -

பிறகு இதில் இருக்கக்கூடிய சாம்பலுக்கு ஏற்றவாறு நெய்யை சேர்த்து கலந்தால் மை தயாராகும். இந்த மையை அப்படியே பிளாஸ்டிக் அல்லது வெள்ளி பாத்திரத்தில் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற ஏதாவது ஒரு சுலோகத்தை மனதார படித்து விட்டு அதை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் இருக்கும் இந்த மையை நம்முடைய நெற்றியில் நாம் திலகமாக வைத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். பணம் அதிகரிப்பதற்குரிய முயற்சிகளில் நமக்கு வெற்றிகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரத்தை தரும் வேல் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து மகாலட்சுமி தாயாரை வசியம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -