- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டிய வரத்தை தரும் வேல் வழிபாடு

வேண்டிய வரத்தை தரும் வேல் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த தெய்வத்திற்கு எந்த அளவிற்கு மகத்துவம் இருக்கிறதோ அதேபோல்தான் அந்த தெய்வ தெய்வத்திற்குரிய ஆயுதத்திற்கும் மகத்துவம் இருக்கிறது. அப்படி மகத்துவம் மிகுந்த ஒரு ஆயுதமாக திகழ்வதுதான் வேல். முருகப்பெருமானை எந்த அளவிற்கு நாம் வழிபடுகிறோமோ அதே அளவிற்கு முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேலையும் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அந்த நன்மைகளைப் பற்றியும் அந்த வேலை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றியும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

ஆயுத வழிபாடு என்பது அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. பலரது இல்லங்களிலும் அரிவாளை தெய்வமாக வைத்து வழிபடும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய சக்தியின் அம்சம் பொருந்திய வேலை நாம் நம்முடைய வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

சொந்தமாக வீடு இல்லை என்று நினைப்பவர்களும், இடம் இல்லை என்று நினைப்பவர்களும், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போராடிக் கொண்டு இருப்பவர்களும், கடனால் கஷ்டப்படுபவர்களும், கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும், நோய்கள் எதுவும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த வழிபாட்டை செய்யலாம். மிகவும் எளிமையாக கூற வேண்டும் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் துன்பங்களும் நீங்குவதற்கு வேல் வழிபாடு மிகவும் சிறப்பான ஒன்றாக திகழ்கிறது.

இந்த வழிபாட்டை நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். அல்லது பரணி, கார்த்திகை, விசாகம், உத்திரம், பூசம் போன்ற நட்சத்திர நாட்களிலும் செய்யலாம். இயன்றவர்கள் தினமும் தொடர்ந்து 48 நாட்கள் என்ற எண்ணிக்கையில் கூட செய்யலாம். கண்டிப்பாக நமக்கு இந்த வழிபாட்டிற்கு வேல் வேண்டும். நம்முடைய உள்ளங்கையின் அளவிற்கு வேல் இருக்க வேண்டும். அதைவிட பெரியதாக இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதலில் இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் கலந்து சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் வேலை வைத்து வேலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஐந்து, ஏழு, ஒன்பது, 11 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் அபிஷேகங்களை செய்யலாம். குறைந்தபட்சம் ஐந்து எண்ணிக்கையிலாவது செய்ய வேண்டும்.

அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்க அபிஷேகமாக கருதப்படுவது பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பன்னீர் அபிஷேகம். இந்த அபிஷேகங்களை செய்யும்பொழுது “ஓம் நமோ பகவதே சரவணபவாய நமோ நமக” என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறு செய்ய வேண்டும். அபிஷேகங்கள் முடிந்த பிறகு வேலிற்கென்று தனியாக ஒரு வஸ்திரத்தை வைத்து வேலை அலங்காரம் செய்து வாசனை மிகுந்த மலர்களை சூட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வேல்மாறல், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றையாவது பாராயணம் செய்ய வேண்டும். இப்படி பாராயணம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய வேண்டுதல் என்னவோ எந்த கோரிக்கைக்காக நீங்கள் இந்த வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த கோரிக்கையை கூற வேண்டும். இப்படி நாம் வேலை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: புது விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்ள ஸ்விட்ச் வோர்ட்

மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படக் கூடிய இந்த வேல் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் காணாமல் போய்விடும்.

சற்று முன்