
மகாலட்சுமிக்குரிய கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை. அதிலும் பங்குனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 11ஆம் தேதி பங்குனி உத்திரமும் சேர்ந்து வருகிறது. அன்றைய தினத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமண வைபோகம் என்பது நடைபெறும். அப்படி மகிழ்ச்சிகரமான வைபோகம் நடக்கக்கூடிய நாளில் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு அளவில்லாத பலன் கிடைக்கும். மேலும் மகாலட்சுமி தாயாரை வசியம் செய்வதற்கும் இந்ல நாள் மிகவும் உகந்ததாக திகழ்கிறது. அப்படி மகாலட்சுமி தாயாரை வசியம் செய்வதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுதும் ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமான தேவையாக திகழக்கூடிய பணத்தை பெறுவதற்கு மகாலட்சுமி தாயாரை நம் வழிபாடு செய்ய வேண்டும். பணம் மட்டுமல்ல உண்ண உணவு, இருக்க இடம் என்று நம்முடைய அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு பொருள் என்றால் அது மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்புதான். புதிதாக கடையிலிருந்து கல் உப்பை வெள்ளிக்கிழமை அன்று காலை அல்லது மதியத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் வாங்கி பூஜையறையில் வைத்து விடுங்கள். மாலை 6:00 மணிக்கு வீட்டில் எப்பொழுதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம் அல்லவா? அந்த வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்த பிறகு வாங்க வைத்திருக்கும் கல்லுப்பிலிருந்து ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இடது கையை அதற்கு மேலே வைத்து மூட வேண்டும்.
இப்படி மூடிய பிறகு மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நினைத்து பின்வரும் இந்த ஒரு மகாலட்சுமி மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இந்த மந்திரம் மகாலட்சுமியை வசியம் செய்வதற்குரிய ஆகர்ஷண மந்திரமாக கருதப்படுகிறது. எந்த ஒரு வீட்டில் இந்த மந்திரம் வெள்ளிக்கிழமை அன்று கூறப்படுகிறதோ அந்த வீட்டிற்கு மகாலட்சுமியின் வருகை என்பது கண்டிப்பாக இருக்கும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய கல் உப்புக்குள் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அதை அப்படியே சமையலறையில் இருக்கக்கூடிய கல்லுப்பு வைத்திருக்கும் ஜாடியில் கொண்டு போய் கொட்டி விட வேண்டும். பிறகு நேராக வீட்டின் நிலை வாசலுக்கு வந்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் தடவி மகாலட்சுமி என் வீட்டிற்குள் வர வேண்டும், நிலையாக நிலைத்திருக்க வேண்டும், செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
“ஓம் ஸ்ரீம் க்லீம் லட்சுமியம் கமல காருண்யம் சிம்ம வாகின்யம் வசி வசி”
இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் கிடைக்க பங்குனி உத்திர வழிபாடு
பங்குனி உத்திர நாள் அன்று இந்த முறையில் மகாலட்சுமி தாயாரின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளோடு குலதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று சிறப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.