- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

குழந்தை மாலை போட்டுக்கொண்டு பிறந்தால் தாய்மாமனுக்கு வரக்கூடிய இன்னல்களும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரமும்

- Advertisement -

ஒரு வீட்டில் புதியதாக குழந்தை பிறந்து விட்டால் முதலில் தாய்மாமன் மற்றும் பெற்றோர்களுக்கு அந்த குழந்தையின் வரவு எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள். குழந்தைக்கு ஜாதகம் பார்க்க என்றாலும் முதலில் தாய்மாமனுக்கு எப்படி உள்ளது என்பதை சொல்லிவிட்ட பின்னர் தான் அந்த குழந்தையின் பலன்கள் பற்றி சொல்ல தொடங்குவார்கள். அவ்வாறு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் கொடி சுற்றி பிறத்தல், மாலை போட்டுக்கொண்டு பிறத்தல் இவற்றால் முதலில் பாதிக்கப்படுவது தாய்மாமன் உறவு தான். இது ஜாதகத்தின் படி100% சொல்லப்படும் உண்மையாகும். எனவே ஒரு குழந்தை மாலை போட்டுக்கொண்டு பிறந்தால் தாய்மாமனுக்கு வரக் கூடிய பாதிப்புகள் என்ன என்பதையும், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரத்தை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்ததுடன் தாய்வீட்டிற்க்கும் இந்த பெண்ணிற்க்கும் இருக்கின்ற உறவு முடிந்து விடுவதில்லை. அந்தப் பெண் குழந்தை உண்டாகி அது பிறக்கும் பொழுது அந்த குழந்தை பிறக்கின்ற நேரமும், அதன் பலனும் முதலில் தாய் வீட்டை தான் பாதிக்கிறது. அவ்வாறு பிறக்கின்ற குழந்தை மாலை போட்டுக்கொண்டு பிறந்தால் முதலில் தாய் மாமனுக்கு ஆகாது என்று சொல்வார்கள். எனவே தீட்டு கழிக்கின்ற வரையிலும், பரிகாரம் செய்கின்ற வரையிலும் அந்த குழந்தையின் முகத்தை தாய்மாமன் பார்க்காமல் இருப்பது தான் நல்லது.

- Advertisement -

அந்தக் குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் தீட்டு எடுப்பதற்காக ஏதாவது ஒரு நாளை முடிவு செய்து வைத்திருப்பார்கள். அந்த நாளுக்குள் இந்த பரிகாரத்தை செய்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். எனவே கட்டுக்கொடி எனப்படும் ஒரு கொடியை குழந்தையின் இடுப்பை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். இந்தக் கொடி நாட்டு மருந்து கடைகளிலும் ஏரி ஓடை போன்ற இடங்களுக்கு அருகிலும் கிடைக்கிறது. இது கிடைக்காதவர்கள் வெள்ளெருக்கு வேர் அல்லது வாழை தண்டு நார் வைத்தும் குழந்தையின் இடுப்பில் சுற்றி விடலாம். இதனை மூன்று நாட்கள் அப்படியே வைத்து விட்டு மூன்றாம் நாள் இதனை கழற்றி ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

பின்னர் தீட்டு எடுத்து விட்டு குழந்தையை ஒரு கோவிலுக்கு தூக்கி வந்து, முதலில் தாய்மாமன் சுவாமியை தரிசனம் செய்து, அதன் பின்னர் தான் குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு கோவிலுக்கு வர முடியாது என்றால் வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கொண்டு, முதலில் தாய்மாமன் தனது முகத்தை எண்ணெயில் பார்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் முதலில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து குழந்தையின் முகத்தை கண்ணாடியின் மூலம் பார்த்துவிட்டு அதன் பிறகு நேரடியாக பார்க்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தாய் மாமானுக்கு வரக்கூடிய இன்னல்களும், பிரச்சனைகளும் அவரது வாழ்க்கையை பாதிக்காமல் தவிர்க்க முடியும். தாய்மாமன் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துவிடக்கூடாது.

இந்த குழந்தை வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகும்போது அந்த இடத்தில் இவர்களுக்கு மாமன் உறவு உண்டாகும். அந்த நேரத்தில் அந்த உறவிற்கும் இவர்களுக்கு இடையே பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். சுமூகமான உறவு இருக்காது. எனவே தாய்மாமன் இல்லாத குழந்தைக்கும் இடுப்பில் இந்த கொடியை கட்டி வைக்கும் பரிகாரத்தை மட்டுமாவது செய்து விடுவதென்பது மிகவும் நன்மையைத் தரவல்லது.

- Advertisement -