- Advertisement -
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் தீர்க்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் கூட தீர வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை நாம் எடுக்க வேண்டும். அப்படி அதற்கான முயற்சியை நாம் எடுத்தும் நம்மால் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர இயலவில்லை என்னும் பட்சத்தில் கடவுளின் அருளையும் பெற வேண்டும். அப்படி கடவுளின் அருளை பெறுவதற்கு சனிக்கிழமை அன்று செய்யக்கூடிய மலர் அர்ச்சனை பற்றி தான் இந்த ஆன்மீகம் பிடித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமாக திகழ்வது நம்முடைய கர்ம வினைகள் தான். நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையிலேயே நமக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கர்ம வினைகளை ஆராய்ந்து அதற்குரிய பலன்களை தரக்கூடியவராக திகழ்ந்தவர் தான் சனி பகவான். சனிபகவானை நாம் முறையாக வழிபடும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய பல பிரச்சினைகள் படிப்படியாக குறைவதை நம்மால் உணர முடியும்.

- Advertisement -

பொதுவாக சனிபகவானை சனிக்கிழமை தோறும் வழிபாடு செய்வது வழக்கமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவருக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சனிபகவானை அவருக்கு பிடித்தமான பொருட்களை பயன்படுத்தி வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் நீதி, நேர்மை, நியாயம் போன்ற விஷயங்களை பின்பற்றுவதன் மூலமும் பிறருக்கு உதவி செய்யும் எண்ணமும் கொண்டிருக்கும் பட்சத்தில் அவரால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும்.

சனிபகவானின் வாகனமாக திகழக்கூடியது காகம். அதனால் சனிக்கிழமை அன்று மட்டுமாவது காகத்திற்கு அன்னம் இட வேண்டும். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை அன்று காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு சங்கு பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதிலும் கருநீலத்தில் இருக்கக்கூடிய சங்கு பூவை பயன்படுத்தி அர்ச்சனை செய்து அவரை வழிபாடு செய்வதன் மூலம் அவருடைய அருளை நம்மால் பெற முடியும். வாராவாரம் தொடர்ந்து சனி பகவானுக்கு சங்கு பூவால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும், ஊனமற்றவர்களுக்கும், ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதன் மூலமும் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மால் வெளிவர முடியும்.

சனிக்கிழமையில் முடிந்த அளவிற்கு பிறருக்கு தங்களால் இயன்ற அன்னதானத்தை செய்வதன் மூலமும் சனிபகவானின் அருளை நம்மால் பெற முடியும். இப்படி சங்கு பூவால் நாம் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து நம்மால் இயன்ற தான தர்மங்களை செய்யும் பொழுது தீர்க்கவே முடியாத பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். கடன் சுமை குறைவதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: வீடு கட்டும் யோகம் அமைய வராகி அம்மன் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கை வைத்து சனி பகவானை வழிபடுவதன் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -