- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீடு கட்டும் யோகம் அமைய வராகி அம்மன் வழிபாடு

வீடு கட்டும் யோகம் அமைய வராகி அம்மன் வழிபாடு

- Advertisement -

சொந்த வீட்டில் குடியேறுவது என்பது நினைக்கும் அனைவருக்கும் நடைபெறாது. அதற்கென்று ஜாதக ரீதியாக யோகம் இருக்க வேண்டும். அந்த யோகம் இல்லாத பட்சத்தில் சொந்தமாக வீடு கட்டினாலும் அந்த வீட்டில் இருக்க முடியாமல் வாடகை வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை கூட உண்டாகும். பலரும் வாடகை வீட்டில் இருந்து கொண்டு சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற கனவுடன் முயற்சிகளை செய்து வருவார்கள். இருப்பினும் அந்த முயற்சிகளில் அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக வீடு மனை வாங்கும் யோகம் பெற வேண்டும் என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். அப்படி செவ்வாய் பகவானின் அருள் இல்லை என்றால் அவர்களால் சொந்தமாக வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படாது. அப்படி செவ்வாய் பகவானின் அருளை பெற வேண்டும் என்றால் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. முருகப் பெருமானை வழிபடுவதற்கு பதிலாக வராகி அம்மனை செவ்வாய்க்கிழமையில் வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும் என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு ஐந்து செம்பருத்தி இலைகள் வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து சுத்தமாக குடித்து முடித்துவிட்டு ஐந்து செம்பருத்தி இலைகளை பறித்து தண்ணீர் ஊற்றி கழுவி அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த செம்பருத்தி இலைகளை ஒரு தாம்பாலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஐந்து அகல்விளக்குகளை எடுத்து அதையும் சுத்தம் செய்த அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அகல் விளக்குகளை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் செம்பருத்தி இலைகளின் மீது வைக்க வேண்டும். பிறகு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு சொந்தமாக இடம் இருக்கிறது. ஆனால் வீடு கட்ட முடியவில்லை என்னும் பட்சத்தில் ஐந்து ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து அந்த அகல் விளக்கிற்குள் போட வேண்டும். சொந்தமாக இடமே இல்லை இனிமேல் தான் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்றால் அந்த விளக்கிற்கும் இலைக்கும் நடுவில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அதாவது ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது விளக்கு இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் வராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த அம்மனுக்கு பசும்பாலை காய்ச்சி நெய்வேத்தியமாக வைத்து அந்த அம்மனுக்கு முன்பாக இந்த தாம்பாளத்தை வைத்து விடுங்கள். வராகி அம்மனின் படம் இல்லாத பட்சத்தில் இந்த ஐந்து தீபங்களை வராகி அம்மனாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். “ஓம் வராகி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை 21 முறை உச்சரிங்கள். இதே போல் தொடர்ந்து 21 செவ்வாய்க்கிழமைகள் வராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது சொந்த வீட்டில் குடியேறும் கனவு என்பது நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: ஆனி மாத முதல் நாள் குலதெய்வ வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் வராகி அம்மனை வழிபாடு செய்து விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் யோகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

சற்று முன்