- Advertisement -

மன மகிழ்ச்சியுடன் வாழ வீட்டில் வளர்க்க வேண்டிய செடி

- Advertisement -

நம் கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றுபோல இருப்பது இல்லை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கிறது. அதை போல் தான் நம் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும். அந்த குணங்களுக்கு ஏற்றவாறு மற்றவர்கள் நடந்து கொண்டால் சண்டை என்பது வராது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரது இல்லங்களிலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தனக்கு என்று தனி வழியை நிர்ணயித்துக் கொண்டு அதற்கு ஏற்ற போல் நடப்பதால் தான் குடும்பத்தில் பிரச்சினைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படுகின்றன. இவை அனைத்தையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு பார்க்க போகிறோம்.

மன மகிழ்ச்சியுடன் வாழ வீட்டில் வளர்க்க வேண்டிய செடி

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணம் என்பது இருக்கும். அந்த குணத்திற்கு காரணமாக திகழ்பவர்கள் தான் நவகிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்தெந்த இடத்தில் எப்படி இருக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தான் அவர்களின் குண நலன்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ராசி, நட்சத்திரத்தை வைத்து ஒருவருக்குரிய குணாதிசியங்களை கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கெடுத்தாலும் பிறரிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அதற்கு சந்திர பகவானே காரணமாக திகழ்கிறார்.

- Advertisement -

சந்திர பகவான் என்பவர் மனதுக்கு அதிபதியாக திகழ்கிறார். மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொண்டோம் என்றால் அதனால் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் சந்திரன் நமக்கு சாதகமாக இல்லை என்று அர்த்தம். இதே நன்மைகள் நடக்கும் பட்சத்தில் சந்திரன் நமக்கு சாதகமாக இருக்கிறார் என்று அர்த்தம். ஒரு குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாததுதான் காரணமாக திகழ்கிறது. இந்த புரிதலுக்கு அதிபதியாக திகழ்பவரும் சந்திர பகவான் தான். அதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது என்றால் சந்திர பகவானுக்குரிய பாதிப்புகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

வாஸ்து ரீதியாக இதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி வீடு அமைந்து இருந்தால் அந்த வீட்டில் சண்டைகள் என்பதே வராது. இன்னும் சில வீட்டிற்கு நாம் சென்றவுடன் சண்டைகள் வரும். அந்த வீட்டில் சந்திரனுக்குரிய திசை என்பது பாதிக்கப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் எந்தவித மாறுதல்களும் செய்யாமல் சந்திரனுக்குரிய செடியை வாங்கி வைத்து வளர்த்தாலே சந்திர பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்பது நீங்கும்.

- Advertisement -

சந்திர பகவானின் ஆதிக்கத்தை பெற்று நன்மைகளை தரக்கூடிய செடியாக திகழ்வதுதான் பன்னீர் செடி. என்ன இது? புதிதாக இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தருவார்கள் அல்லவா? அந்த பன்னீர் இலை இருக்கக்கூடிய செடியை தான் பன்னீர் செடி என்று கூறுகிறோம். இந்த செடியை வீட்டில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் வாங்கி வைத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பதன் மூலம் சந்திர பகவானின் ஆதிக்கம் நமக்கு சாதகமாக அமையப்பெற்று குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மன மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே:தோஷங்களை நீக்கும் வளர்பிறை பிரதோஷ வழிபாடு

இந்த எளிமையான வாஸ்து ரீதியான பரிகாரத்தை செய்து குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

- Advertisement -