- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதோஷங்களை நீக்கும் வளர்பிறை பிரதோஷ வழிபாடு

தோஷங்களை நீக்கும் வளர்பிறை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய நாளாக திகழ்வதுதான் பிரதோஷம். பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய தினத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோஷ நாளன்று வீட்டில் எந்த முறையில் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்கப் போகிறோம்.

தோஷங்களை நீக்கும் வளர்பிறை பிரதோஷ வழிபாடு

பொதுவாகவே பலரும் பிரதோஷ நாளன்று உபவாசம் இருந்து மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்வார்கள். அங்கு நடக்கக்கூடிய பிரதோஷ அபிஷேகத்திலும் வழிபாட்டிலும் கலந்து கொள்வார்கள். இப்படி தொடர்ச்சியாக பிரதோஷ வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும், தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த பிரதோஷ நாளன்று வீட்டில் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாகவே ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டில் சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்வார்கள். அப்படி சிவலிங்கம் இல்லை என்றால் சிவபெருமானின் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் முழுமையான பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அப்படி முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்றால் சில சூட்சுமமான வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அந்த வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாளன்று வீட்டில் சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் பிரதோஷ நேரத்தில் சந்தனத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தீபம் ஏற்றி வைத்து பழங்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சிவலிங்கம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து உங்களால் இயன்ற ஏதாவது ஒரு பழத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்யும் பொழுது சிவபெருமானுக்குரிய மந்திரத்தையும் கூறி வழிபாடு செய்தால் அந்த பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும். அப்படி ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாளன்று நாம் சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை கூறும் பொழுது சிவபெருமானின் அருளால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

ஓம் சிவ சிவ சிவாய நம

இதையும் படிக்கலாமே:15-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு

இந்த முறையில் பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து மந்திரத்தைக் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் குடும்பத்தில் நன்மைகள் அனைத்தும் நடைபெறும். தோஷங்கள் விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்