- Advertisement -
- Advertisement -

எப்போதும் மனைவியை கணவன் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் இருந்தால் மனைவி, கணவனை விட்டு எங்கும் செல்ல மாட்டாள் என்று கணவனுக்கே புத்தி சொல்லும் நேரத்தில் மனைவிக்கும் கொஞ்சம் அறிவுரை கூறலாமா? ஒருவரை ஒருவர் எவ்வளவு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் சிறந்த தம்பதிகளாக அங்கீகரிக்கப்படுவீர்கள். கணவனை கைக்குள்ளேயே வைத்திருக்க மனைவி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

வீட்டில் கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் அதிக செலவாளி ஆகவும், ஒருவர் சிக்கனவாதியாகவும் இருப்பார்கள். யார் சிக்கனத்தை கடைபிடிக்கின்றாரோ, அவர்களிடம் குடும்ப நிர்வாகம் இருப்பது நல்லது. மனைவியிடம் பெரும்பாலும் சிக்கனமும், பொறுப்பும் இருப்பதால் குடும்பத்தை அவர் நிர்வகித்தால், கணவன் வெளியில் செல்லும் பொழுது மனைவி கணக்கு பார்த்து பணத்தை கொடுத்து அனுப்பக்கூடாது. கணக்காய் பணம் கொடுத்து அனுப்பினால் கணவனுக்கு மனைவி மேல் அன்பு வராது.

- Advertisement -

மனைவி கோபப்படும் பொழுது கணவன் அமைதியாக இருப்பது போல, கணவன் கோபப்படும் பொழுது மனைவி வாயை மூடிக் கொள்ள வேண்டும். ஒருவர் கோபத்தில் இருக்கும் பொழுது மற்றொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் கோபமாக இருக்கும் பொழுது, மனைவி எதையும் பேசாமல் கோபம் தணிந்தபின் பேசுவது நல்லது.

வாரத்தின் ஆறு நாட்கள் மனைவி வீட்டையும், கணவன் வேலையிலும் பொறுப்புடன் இருக்கிறார்கள். ஒரு நாள் மட்டும் ஓய்வெடுக்க விடுமுறை கிடைக்கிறது. அந்த நாளிலும் கணவனுக்கு ஓய்வு தராமல் எல்லா வாரமும் வெளியில் சுற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒருநாள் உடம்பிற்கு ஓய்வு கிடைத்தால் தான் கணவன் மற்ற ஆறு நாட்களும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.

- Advertisement -

கணவன் பேசும் பொழுது அல்லது கேள்வி கேட்கும் பொழுது அதை அலட்சியம் செய்யாமல் மனைவி பதில் கூற வேண்டும். மனைவி பேசும் பொழுதும் அப்படித்தான் கணவனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவரின் அலட்சியம், இன்னொருவருக்கு வெறுப்பை தரும். வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வருபவருக்கு இடையில் சமூகம் சார்ந்த சில பிரச்சனைகள் வரலாம். வீட்டுக்கு தாமதமாக வரும் பொழுது காரணம் கேட்காமல், தேவையில்லாமல் எரிந்து விழுவதை மனைவி செய்யவே கூடாது.

மனைவிக்கு உதவி செய்யும் கணவனும், கணவனுக்கு பணிவிடை செய்யும் மனைவியும் அமைவது வரம். கணவன் உங்களுக்கு உதவி செய்யும் பொழுது அதில் குறை கூறாமல் பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். குறை கூறினால் அடுத்த முறை அவர்களுக்கு செய்யவே தோன்றாது. ஏதாவது ஒரு பொருளை வீட்டிற்கு வாங்கி வந்தால் அதிலும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். புகுந்த வீட்டில் இருப்பவர்களை பற்றி கணவனிடம் குறையாக சொல்லக்கூடாது. மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் இந்த எல்லா விஷயங்களும், கணவன் மனைவியிடமும் எதிர்பார்க்கிறான் ஆனால் அதனை அவன் வெளிக்காட்டிக் கொள்வதில்லை அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே:
காத்து கருப்பு கண் திருஷ்டி விலக பரிகாரம்

குடும்பத்திற்காக கஷ்டப்படும் கணவன் சாப்பிடும் பொழுதும், தூங்கும் பொழுதும் அவனுக்கு நிம்மதியை கொடுப்பது தான் நல்ல மனைவிக்கு அழகு! சாப்பிடும் நேரத்திலும், தூங்கும் நேரத்திலும் சண்டையிடக்கூடாது, அன்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய நாள் எப்படி போனது? உடம்புக்கு ஏதும் செய்கிறதா? சாப்பிட்டீர்களா? போன்ற கேள்விகளை நாள் தவறாது ஒருமுறை கேட்டு விடுங்கள். எப்போதும் குடும்பத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட கணவனை மனைவி இப்படித்தான் நடத்த வேண்டும். மனைவி இவற்றை கடைப்பிடித்தாலே கணவன் தன் கைக்குள்ளையே எப்பொழுதும் இருக்க நினைப்பான்.

- Advertisement -