
உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கக் கூடாது என்பதற்காக எதிரிகள் சில பல விஷயங்களை செய்கிறார்களா, இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், எல்லாம் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், மந்திர கட்டு, கண் திருஷ்டி செய்வினை, ஏவல், பில்லி சூனியம் போன்ற பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கூட நல்ல தீர்வு கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தூங்க செல்வதற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு மூன்று எலுமிச்சம் பழங்கள் தேவை. ஒரு தாம்பல தட்டிற்கு கீழே கல் உப்பை பரப்பி, அதன் மேலே 3 எலுமிச்சம் பழங்களை நிக்க வையுங்கள். அதற்கு மேலே 3 கட்டி கற்பூரத்தை வைத்து ஒருவர் அந்த கற்பூரத்தை கொளுத்தி விட வேண்டும்.
இந்த கற்பூரம் எரிந்து முடியும் வரை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தட்டுக்கு முன்பாக அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை மந்திரமாக உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு ‘ஓம் கருமாரி அம்மனே போற்றி! ஓம் முனீஸ்வரரே போற்றி! ஓம் அய்யனாரே போற்றி!’ இப்படி உங்கள் குல தெய்வத்தின் நாமத்தை சொல்லி போற்றி மந்திரத்துடன் சொன்னால் போதும். இத்தனை முறைதான் மந்திரத்தை சொல்ல வேண்டும் என்ற கணக்கு இல்லை. கற்பூரம் எரிந்து முடியும் வரை குல தெய்வத்தின் நாமத்தை சொல்லுங்கள்.
பிறகு உங்களுடைய குடும்பத்தில் வயதில் மூத்தவர்கள் அந்த தட்டை அப்படியே கொண்டு போய் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து விடுங்கள். மற்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் கை கால் முகம் கழுவிக்கொண்டு இரவு தூங்க செல்லலாம். வீட்டின் வரவேற்பரையிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம்.
குடும்பத் தலைவி அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்காக அறுத்து விட வேண்டும். மூன்று எலுமிச்சம் பழங்களையும், நான்காக அறுத்து விடுங்கள். அறுத்து வைத்திருக்கும் எலுமிச்சம் பழம் முதல் எல்லா பொருட்களையும் ஒரு கவரில் கொட்டி வீட்டிற்கு வெளியே குப்பை தொட்டி இருந்தால் அந்த இடத்தில் வீசிவிடலாம்.
அப்படி இல்லை என்றால் குப்பை தொட்டியில் போட்டு இந்த பொருட்களை எல்லாம் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைத்து விட வேண்டும். காலையில் அப்படியே எடுத்து குப்பை கூடையோடு கொண்டு போய் குப்பை தொட்டியில் இதை கொட்டி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக துளசி தீப வழிபாடு
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் தீராத பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் துர் சக்திகளும் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிவாரத்தை செய்து பலன் பெறலாம்.