- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்கள் குழந்தைகள் கல்வியில் சாதிக்க வேண்டுமா? சுலபமான வழிபாடு.

நம் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் செல்வதற்காக எடுத்து வைக்கப்படும் முதல்படி என்பது கல்விதான். முதல் படியான, கல்வி பயிலுவதிலேயே தடைகள் ஏற்பட்டால் அது அவர்களுக்கு முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இயற்கையாகவே சில குழந்தைகள் கல்வி பயில்வதில் சிறந்து விளங்குவார்கள். சில குழந்தைகளுக்கு கல்வியில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. கல்வியில் ஆர்வம் இல்லாமல் படிப்பதை தவிர்ப்பதால் அவர்களுக்கு பிற்காலத்தில் என்ன பிரச்சனை வரும் என்பதும் தெரியாது. ஆனால் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் படிக்கவில்லையே என்ற கவலை மனதுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும். பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் அவர்களது ஜாதகத்தில் ஏதாவது சில தோஷங்கள் இருப்பதற்கு கூட வாய்ப்பு உண்டு. அல்லது ஞாபக சக்தி குறைபாடாக கூட இருக்கலாம். நம் பிள்ளைகள் படிப்பதில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனைகளாக இருந்தாலும், அதிலிருந்து விடுவித்து அவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமை.

உங்களது குழந்தைகள் படிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமாக இருந்தாலும் அதை ஒரு சுலபமான வழிபாட்டின் மூலம் நீக்கிவிட முடியும். அந்த வழிபாடு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடுவதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி தடை நீக்கப்படும். எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அதை நீக்கும் சக்தி அந்த விநாயகருக்கு உண்டு. பச்சை நிறத்தில் உள்ள மரகத விநாயகரை நம் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த விநாயகருக்கு வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் சுத்தமான மலை தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த தேனினை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு, அந்தத் தேனை துளசி இலையினால் எடுத்து, வில்வ இலையில் மீது வைத்து குழைத்துக் கொண்டு அந்த தேனை உங்களது பிள்ளைகளின் நாவில் தினம்தோறும் தடவி வர வேண்டும்.

இந்த மலைத்தேனிற்க்கு இயற்கையாகவே குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை தரும் வல்லமை உள்ளது. ஞாபக சக்தியை தருவதற்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் கூட இந்த மலை தேனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. மரகத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேனிற்க்கு இன்னும் சக்தி கூடி விடுகிறது.

- Advertisement -

வீட்டில் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள், உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஏதாவது ஒரு பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்குச் சென்று அந்த சிவ லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்து அந்த தேனை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து தினம்தோறும் உங்கள் பிள்ளைகளை சாப்பிட வைப்பதன் மூலமும் உங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதில் உள்ள தடைகள் நீங்கும்.

முழு மனதுடன் அந்த இறைவனை மனதில் நினைத்து இந்தப் பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். இந்த தேனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தைகள் தன்னை அறியாமலேயே, படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபாடு கொள்வதை பெற்றோர்கள் நிச்சயம் உணர முடியும். தங்கள் பிள்ளைகள் படிக்கவில்லையே என்ற கவலையில் இருந்து நீங்கி, பெற்றோர்களும் நிம்மதி அடையலாம்.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்படும் செய்வினையை எப்படி கண்டுபிடிப்பது? செய்வினையில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம்?

English Overview:
Here we have Kalviyil sirakka manthiram. Kalviyil sathikka slokas in Tamil. Kalviyil sathikka slogam in Tamil. Kalviyil sirakka Tamil.

- Advertisement -