
இன்று சோமவார பிரதோஷம். சிவபெருமானுக்கு உரிய இந்த நன்னாளில் மிக மிக சக்தி வாய்ந்த மரகத லிங்கத்தின் சிறப்புகளை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மரகத லிங்கத்தை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொண்டு இந்த பதிவில், மேலே புகைப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மரகத லிங்கத்தை பார்த்து, உங்களுடைய வேண்டுதலை சொல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் வைத்த வேண்டுதலானது கூடிய விரைவில் பலிக்கும்.
நவகிரகங்களின் இளவரசன் என்ற சொல்லப்படும் கிரகம் புதன் பகவான். புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. புதன் பகவானுக்கு உரிய கல் என்றால் அது மரகதக் கல். இந்த மரகதலிங்கமும் பச்சை நிறத்தில் தான் இருக்கும். புதன் கிரகமானது நமக்கு நிறைய நன்மைகளை செய்யக்கூடிய கிரகம் செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய கிரகம். மணக்குழப்பத்தை தீர்த்து வைக்கக்கூடிய கிரகம்.
தேவலோகத்தில், 7 மரகத லிங்கத்தை வைத்து இந்திரன் வழிபாடு செய்ததாக புராணங்கள் சொல்லப்படுகிறது. இந்திரனுக்கு நிகரான செல்வ வளம் கிடைக்க, ஆரோக்கியம் கல்வி, உத்தியோகத்தில் சிறக்க, வியாபாரத்தில் பெரிய அளவில் முன்னேற மன அமைதி கிடைக்க, இந்த மரகத லிங்கத்தை நாமும் வழிபாடு செய்யலாம்.
பூலோகத்தில் வாழும் மக்களுக்கும் இந்த மரகத லிங்கத்தின் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், மக்கள் இந்த மரகத லிங்கத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், முசுகுந்த சர்க்கரவர்தி, இந்திரனை நோக்கி தவம் செய்து, அந்த ஏழு மரகத லிங்கத்தையும் கொண்டு வந்து பூலோகத்தில் பிரபலம் வாய்ந்த சிவன் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராண கதைகள் கூறுகின்றது. அந்த வரிசையில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாய்மூர், ஆகிய ஏழு இடங்களில் இந்த மரகத லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
இன்றளவும் இந்த திருத்தலங்களுக்கு நீங்கள் சென்றால் மரகத லிங்கத்தை தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரகதலிங்கம் எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ, அந்த இடம் பிரபல்யமாக இருக்கும். அந்த இடம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலையில் இருக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் சிலையும் மரகதகல்லால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில் மரகத லிங்கத்தை பற்றின சிறப்புகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம். இந்த பதிவின் மேலே புகைப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மரகத லிங்கத்தை பார்த்து உங்களுடைய கஷ்டங்களை சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் சோமவார பிரதோஷ பரிகாரம்
சக்தி வாய்ந்த மரகதலிங்கம் உங்களைத் தேடி உங்கள் முன்பு வந்து நிற்கிறது. பிரதோஷ தினமான இன்று மரகத லிங்கத்திடம் பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.