- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளத்தை அதிகரிக்கும் சோமவார பிரதோஷ பரிகாரம்

செல்வ வளத்தை அதிகரிக்கும் சோமவார பிரதோஷ பரிகாரம்

- Advertisement -

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அன்றைய தினத்தில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கித் தருவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கே உரிய கிழமையான திங்கட்கிழமையோடு சேர்ந்து வரும்பொழுது அதற்கு அதிக சக்தி இருக்கும். அதிலும் குறிப்பாக வளர்பிறையோடு வரக்கூடிய பிரதோஷம் என்பதால் நம்முடைய செல்வ வளத்தை பெருக்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி செல்வ வளத்தை பெருக்குவதற்கு சோமவார பிரதோஷ நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் அன்றைய தினம் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்து விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் நந்தி வழிப்பாடும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி திங்கட்கிழமையோடு வரக்கூடிய பிரதோஷ நாள் என்பதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் பல ஆலயங்களில் குடமுழுக்கு விழாவும் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட நாளில் சிவபெருமானுக்கு தும்பை ,ஊமத்தை பூ, வில்வ இலை, தாமரைப்பூ போன்றவற்றை வாங்கித் தர வேண்டும். அதோடு சிவபெருமானின் வாகனமாக திகழக்கூடிய நந்தி பகவானுக்கு காப்பரிசி செய்து தருவதும் நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற முடியாது. அப்படிப்பட்டவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமான் மற்றும் நந்திக்கு தங்களுக்கு தெரிந்த அளவு அபிஷேகமும் பூஜையும் செய்து வழிபாடு செய்யலாம்.

ஒரு வேளை வீட்டிலும் பூஜை செய்ய இயலாத நிலையில் இருப்பவர்கள் அன்றைய தினத்தில் வரக்கூடிய சந்திர ஹோரையில் சிவபெருமானை நினைத்து ஒரு பரிகாரத்தை செய்தால் அந்த பரிகாரத்தின் பலனால் அவர்களுக்கு இருக்கக்கூடிய செல்வ வளம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை சந்திர ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம் அல்லது பிரதோஷ நேரத்தில் செய்யலாம். இந்த நான்கு நேரங்களையும் தவறவிட்டவர்கள் ராகு காலம் எமகண்டத்தை தவிர்த்து மீதம் இருக்கும் நேரத்தில் இரவு 12 மணிக்குள் செய்யலாம். இதற்கு முனை உடையாத பத்து பச்சரிசி வேண்டும்.

- Advertisement -

இந்த பச்சரிசியை உங்களுடைய இடது கையில் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். பிறகு சிறிதளவு பச்சை கற்பூரத்தை கைகளில் நுணுக்கி அந்த பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தையும் இந்த பச்சரிசியுடன் வைத்து உங்களது வலது கையை வைத்து பச்சரிசியை மூடிக்கொள்ளுங்கள்.

இப்பொழுது சிவபெருமானை முழுமனதோடு நம்பி பணம் வரவு அதிகரிக்க வேண்டும் செல்வ வளம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு “ஓம் சோமேஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் பூஜையறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நம்முடைய வீட்டில் எந்த இடத்தில் அமைதியாக நம்மால் செய்ய முடியுமோ அந்த இடத்தில் அமர்ந்து செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவ்வாறு சிவபெருமானை மனதார வழிபாடு செய்த பிறகு இந்த பச்சரிசி, பச்சைக் கற்பூரம், நாணயத்தை பணம் வைக்கும் இடத்தில் ஒரு பேப்பரில் மடித்து வைத்து விடுங்கள். ஒரு மாதம் வரை இது அப்படியே இருக்கட்டும். ஒரு மாதம் கழித்து பச்சரிசியை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அந்த நாணயத்தை ஏதாவது கோவில் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பிரதோஷ நாளன்று கூற வேண்டிய சிவ மந்திரம்.

இந்த முறையில் சோமவாரத்தில் வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் செல்வ வளம் உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்