- Advertisement -
- Advertisement -

பல பேருக்கு முகங்களிலும், கழுத்து, அக்கு போன்ற பகுதிகளிலும் மருக்கள் தோன்றும். இவை சிறு சதை போன்ற அமைப்பில் இருக்கும். இது முகத்தின் அழகை கெடுப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது. இதை நாம் அப்படியே கிள்ளுவதன் மூலம் அதிலிருந்து ரத்தம் அதிகப்படியாக வெளியேறும் வாய்ப்புகளும் இருப்பதால் இதை நாம் அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் மிகவும் எளிமையான அதே சமயம் இயற்கையான முறையில் மருக்களை நீக்கக்கூடிய வழிகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே ரத்த நாளங்கள் மற்றும் கொலாஜின் இவை இரண்டும் ஒன்று சேர்ந்து சருமத்திற்கு வெளியே தோன்றக்கூடியதை தான் மருக்கள் என்று கூறுகிறோம். இந்த மருக்களில் ரத்தநாளங்கள் இருப்பதால் இதை நாம் சாதாரணமாக நீக்க முடியாது. அதுவாகவே தோளிலிருந்து உதிர்ந்தால்தான் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

இதற்காக நாம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது அந்த மருக்கள் நீங்க வாய்ப்புகள் இருந்தாலும் மருக்கள் நீங்கிய இடத்தில் ஒருவித தழும்பு ஏற்பட்டு விடும். பிறகு அந்த தழும்பை நீக்குவதற்காக சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு இயற்கையிலேயே எளிமையான முறையில் மருக்களை நீக்கும் முறைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

ஒரு துண்டு இஞ்சி தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஐந்து பற்கள் பூண்டையும் தோல் உரித்து எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை மருக்கள் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற வீதத்தில் தினமும் வைத்து வர மருக்கள் அதுவாகவே உதிர்ந்து விடும். மேலும் அதனால் எந்தவித வடுக்களும் ஏற்படாது.

- Advertisement -

அடுத்ததாக சாலை ஓரங்களில் வளரக்கூடிய அம்மன் பச்சரிசி செடி. இந்த செடி பொதுவாக சாலை ஓரங்களில் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது, இந்த செடியை நாம் உடைத்தால் அதிலிருந்து சிறிதாக பால் போல் ஒன்று வரும். அந்த பாலை எடுத்து மருக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதையும் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்து முறை தினமும் தடவி வர மருக்கள் அதுவாகவே உதிர்ந்து கீழே விழுந்து விடும்.

மூன்றாவது டிப்ஸ் இதற்காக நாம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து மருந்து கடைகளிலும் இது கிடைக்கும். இதுதான் டி ட்ரீ ஆயில். இந்த எண்ணையை வாங்கி வந்து மருக்கள் இருக்கும் இடத்தில் தடவுவதன் மூலம் மருக்கள் உதிர்ந்து விடும். ஆனால் இந்த எண்ணையை நாம் தடவுவதற்கு முன்பாக மருக்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்த பிறகு தடவ வேண்டும். மேலும் இந்த எண்ணெயை தடவுவதன் மூலம் ஒரு சிலருக்கு எரிச்சல் மற்றும் வலிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நிரந்தரமான தீர்வை தரக்கூடிய ஒன்றாக இந்த எண்ணை இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சி அதிகரிக்க ஹேர் பேக்

மிகவும் எளிமையாக சிரமம் இல்லாமல் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நமக்கு தேவையில்லாமல் இருக்கக்கூடிய மருக்களை நம்மால் எளிதில் நீக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -