முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சி அதிகரிக்க ஹேர் பேக்

hair fall hairpack
- Advertisement -

முடி உதிர்வு என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கக் கூடியது தான். ஒரு நாளைக்கு 50 முடிகள் வரை உதிரத் தான் செய்யும். இதற்காக நாம் பெரிதாக பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு கையை வைத்தாலே முடி கொத்து கொத்தாக உதிரும். அதிலும் தலை குளித்து விட்டு முடியை துவட்டினால் மொத்த முடியும் வந்து விடுமோ என்று பயப்படும் அளவிற்கு முடி உதிரும்.

இதற்கென அவர்கள் எத்தனையோ ஃபேஸ் பேக் ஆயில் சீரம் என பயன்படுத்தியிருந்தாலும் இந்த முடி உதிர்வுக்கு தீர்வு இருந்திருக்காது. அப்படி முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிதில் சரி செய்யக் கூடிய ஒரு எளிமையான ஹேர் பேக் முறையை தான் இப்போது இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முடி உதிர்வை தடுக்க ஹேர் பேக்

இந்த ஹேர் பேக் தயாரிக்க முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் இந்த வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து இத்துடன் ரெண்டு செம்பருத்திப் பூ, ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் இவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது தான் நல்ல பலனை தரும் அடுத்து கால் கப் தேங்காய் பால், கால் கப் அரிசி வேக வைத்து வடிகட்டிய கஞ்சி தண்ணீர். இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தலையில் தேய்த்து நன்றாக ஊற விட வேண்டும்.

- Advertisement -

இந்த பேக் தலையில் ஊறிய பிறகு மயில்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து முடியை நன்றாக அலசி விடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறை பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும் போதே நல்ல பலனை பெற முடியும். இந்த பேக்கை ஒரு முறை அரைத்தால் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

இந்த பேக்கை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன்பாக வெளியில் சிறிது நேரம் எடுத்து வைத்து விட்டு பிறகு பயன்படுத்துங்கள்.தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி உதிர்வை அதிகரிக்க தேவையற்ற கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நாம் வீட்டில் இருக்கும் இயற்கையான இந்த பொருட்களை வைத்து சரி செய்து கொள்வதே சிறந்த வழி.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்க

இந்த பேக்கை பயன்படுத்துவதுடன் நல்ல ஆரோக்கியமான உணவு, உறக்கம், தண்ணீர் போன்றவற்றை சரியான முறையில் எடுத்துக் கொள்வது அவசியம். இந்த ஹேர் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்

- Advertisement -