
அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர், கூல்டிரிங்ஸ் என்று கண்டதை குடித்து வயிற்றை கெடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் ஆரோக்கியமானதையும் வயிற்றுக்குள் போடுவோமே. அந்த வரிசையில் சூப்பராக நீர் மோர் குடிக்கலாம். நீர் மோரை கொஞ்சம் ஸ்பெஷலாக மாற்றி குடித்தால் இன்னும் எப்படி இருக்கும். அதிலும் வயிற்று உபாதைகள் எல்லாம் தீருவதற்கு ஒரு ஸ்பெஷல் நீர்மோர் எப்படி தயார் செய்வது என்பதைத்தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். மிஸ் பண்ணாம இந்த வெயில் காலத்துல முடியும் போதெல்லாம் இந்த மோரை தயார் செய்து குடியுங்கள். வயிறு சும்மா குளுகுளுனு இருக்கும் எப்போதுமே.
கொஞ்சம் திக்காக 1 கப் அளவு மோர் நமக்கு தேவை. தயிராக உங்கள் வீட்டில் இருந்தால் அதை மத்து கொண்டு நன்றாக சிலுப்பி விட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை ஒரு குண்டானில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், மிக மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
அடுத்து நன்றாக சுத்தம் செய்த ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மெழுகு தேய்த்து மண் அகல் விளக்கு வருகிறது அதை பயன்படுத்தக் கூடாது. சுத்தமான மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கை அடுப்பில் மேல் வைத்து கடுகு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், மிகக் குறைந்த அளவு கருவேப்பிலை போட்டு தாளித்து இந்த மண் அகல் விளக்கை அப்படியே இடுக்கியில் பிடித்து எடுத்து சுடச்சுட இருக்கும்போது நாம் கலந்து வைத்திருக்கும் மோருக்குள்ளே விட்டு விட வேண்டும். (தாளிப்போடு மண் அகல் விளக்கையும் மோருக்குள் போட்டு விடுங்கள்).
மோருக்கு மேலே அப்படியே ஒரு மூடி போட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து உள்ளே போட்ட மண் அகல் விளக்கை வெளியே எடுத்து விடுங்கள். மண் அகல் விளக்கின் புகைவாசத்தோடு அந்த மோர் தனி சுவையில் இருக்கும். இறுதியாக இந்த மோரில் தேவையான அளவு உப்பு, காரா பூந்தியை தூவி குடித்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்குங்க.
இதை மசாலா மோர் என்று சொல்லலாம். அப்படி இல்லை என்றால் தம் மோர் என்று சொல்லலாம். நம் விருப்பம் தான். ஆனால் இதை பிகாரில் உத்திரப்பிரதேசத்தில் சனாட்டா என்ற பெயரில் சொல்லுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
சரி பெயர் என்னவாக இருந்தால் என்ன. ஆரோக்கியம் தருகிறது அல்லவா. இந்த மோரை அப்படியே குடித்து ருசித்து வயிறை குளுகுளுவென வைத்துக் கொள்ளுங்கள். சரி சின்ன குழந்தைகளுக்கு இதை எப்படி கொடுக்கலாம். வீட்டில் பாணி பூரி பொரிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: ஒரு கப் ரவை இருந்தா ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு டக்குனு மொறுமொறுன்னு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்திடுங்க. நீங்க டீ போடுற டைமுக்குள்ள இந்த ஸ்நாக்ஸ் ரெடியாகிடும்.
ரெடிமேட் பாணி பூரி இப்போது கிடைக்கிறது. அதை பொரித்து அதன் நடுவே ஓட்டை போட்டு அதில் இந்த மோரை ஊற்றி அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரியவர்களும் இதை ஸ்நாக்ஸ் ஆக ஈவினிங் சாப்பிடலாம். உங்களுக்கு இந்த எளிமையான ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம இந்த சம்மர்ல ட்ரை பண்ணி பாருங்க.