இல்லத்தரசிகளுக்கு எப்பொழுதுமே பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து தருவது என்ற ஒரு பெரிய குழப்பமே இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகைகளை என்ன தான் கடைகளில் வாங்கி கொடுத்தாலும் வீட்டில் நாம் செய்து கொடுப்பது போல ஆரோக்கியமாக இருக்காது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து நல்ல ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
ரவை – 250 கிராம். மைதா மாவு – 2 ஸ்பூன், முட்டை -1, சர்க்கரை – 5 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன், காய்ச்சிய பால் – 5 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக நுரை வரும் அளவிற்கு விஷ்க் வைத்து அடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கறையும் வரை மீண்டும் ஒரு முறை நன்றாக அடித்து கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கலவையுடன் ரவையை சேர்த்து கொள்ளுங்கள் . மேலும் இத்துடன் மைதாவையும் சேர்த்து கொள்ளுங்கள். இதில் மைதா சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டில் எதாவது ஒரு மாவு கட்டாயமாக சேர்க்க வேண்டும். இத்துடன் ஏலக்காய் தூள், காய்ச்சிய பால் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள். இது ஊற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அடுப்பை மீடியம் பிளேமிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் சேர்த்து ஒரு பொருள் சிவந்த பிறகு மறுப்புறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். இதை பொறித்து எடுக்கும் போது அடுப்பை மீடியம் பிலேமில் வைத்தே செய்யுங்கள்.
மாலை பள்ளி முடிந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு நல்ல மொறு மொறு என்று சூப்பரான இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே சிம்பிளான இந்த ஸ்நாக்ஸை நீங்களும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.