- Advertisement -
சமையல் குறிப்புகள்

ரவை மற்றும் தயிரை வைத்து இப்படி ஒரு அற்புதமான மசாலா ஸ்டஃப்பிங் கேக் செய்வது எப்படி?

- Advertisement -

காலை உணவிற்கு இட்லி, தோசைக்கு பதிலாக வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ரவா மசாலா ஸ்டஃப்பிங் கேக் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இது சாப்பிடுவதற்கு மிகவும் சாஃப்ட்டாகவும் இதன் உட்பகுதி மசாலா சுவையுடனும் இதுவரை நீங்க சுவைத்த வித்தியாசமான சுவையில் இருக்கும். வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இதனை சமைத்து விடலாம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ரவை மாவு:
ரவை – ஒரு கப், புளிக்காத தயிர் – ஒரு கப், தண்ணீர் – ஒரு கப், உப்பு – கால் ஸ்பூன், சோடா மாவு – கால் ஸ்பூன்.

- Advertisement -

ஸ்டஃப்பிங்:
எண்ணெய் – 2 ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு.

தாளிக்க:
எண்ணெய்– 2 ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, கொத்தமல்லி இலை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
ஒரு வாயகன்ற கிண்ணத்தில் ஒரு கப் ரவை, ஒரு கப் தயிர் மற்றும் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துக் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்க்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாய் சேர்த்து பின்னர் அவற்றுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போன்றவற்றையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலைந்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து அதனுடன் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பின்னர் இவற்றிற்கு தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கவேண்டும்.

இந்த மசாலா சிறிது ஆறியவுடன் சிறு சிறு உருண்டையாக எடுத்து கொழுக்கட்டை பிடிப்பதுபோல் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஊறவைத்த மாவினை வீட்டில் பயன்படுத்தும் ஒரு டம்ளரை எடுத்து அதில் ஒன்றரை கரண்டி மாவினை ஊற்ற வேண்டும். பின்னர் அதனுள் பிடித்து வைத்த மசாலாவை வைத்து அதற்கு மேல் அரைக்கரண்டி மாவை ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு டமளரிலும் மாவு மற்றும் மசாலாவை சேர்த்து ஊற்றி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது இட்லி பாத்திரம் வைத்து, அதிலுள்ள இட்லி தட்டின் மீது மாவு ஊற்றி வைத்துள்ள டம்ளர்களை வைக்க வேண்டும். பிறகு மூடி விட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து பிறகு வெளியே எடுக்க வேண்டும். சிறிது நேரம் ஆறிய பின்னர் கத்தியை வைத்து அதன் ஓரங்களை லேசாக கீறி வெளியே எடுக்க வேண்டும்.

பின்னர் இதன் சுவையை இன்னும் கூடுதலாக்க ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் எடுத்து வைத்துள்ள மசாலா கேக்கை ஒரு முறை லேசாக பிரட்டி எடுக்க வேண்டும். இதே போல் செய்து வைத்துள்ள அனைத்தையும் இவ்வாறு பிரட்டிக் கொள்ள வேண்டும்

இந்த ரவை மசாலா சத்தம் கேட்கிறது தொட்டுக்கொள்ள தனியாக சட்னி சாம்பார் என்று எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -
Published by