
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். வீண்விரய செலவுகள் வரலாம். உடல் உபாதைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. உணவு பழக்க வழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. மற்றபடி இந்த நாள் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்ற இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் வராது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த பகை விலகும்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மன அமைதி கிடைக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். பகை விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கொஞ்சம் வீண்விரையை செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆரோக்கியம் சீராக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டிருந்த வேலையை கையில் எடுப்பீர்கள். பழுது பார்க்கும் வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. பொறுமை தேவை. முன்கோபம் வேண்டாம். அவசரம் வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இன்று நிதானத்தோடு இருங்கள். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று திறமை வெளிப்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரிய அளவில் பிரச்சினையாக இருக்கக்கூடிய விஷயங்களை கூட, சர்வ சாதாரணமாக சரி செய்து விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பார்ப்பவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு இன்று உங்களுடைய செயல்பாடு இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். முருகர் வழிபாடு மனதிற்கு நிறைவை தரும். டென்ஷன் குறையும். மனதில் இருந்த சந்தேகங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுபகாரிய தடை விலகும்.
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று டென்ஷன் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். தேவையில்லாத எதிரி தொல்லை வரும். பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிதானமாக இருக்க வேண்டிய நாள். இறை வழிபாடு செய்யுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வருமானம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பெண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதுசாக சேமிப்புகள் துவங்கலாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் மேற்கொள்ளலாம். லாபமான நாளாக இருக்கும். வேலையில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போனாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முருகர் வழிபாடு செய்யுங்கள்.