- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நாளை மாசி அமாவாசை – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு

தை பிறந்ததும் கடுமையான கோடை காலத்தை நோக்கி அதன் பிறகு வரும் மாதங்கள் செல்கின்றன. ஆனால் வெப்பம் சுட்டெரிக்கும் முன்பாக வரும் ஒரு பருவம் வசந்த காலமாகும். இந்த வசந்த காலம் தை மாதத்திற்கு அடுத்து வரும் மாசி மாதத்தில் வருகிறது. பல சிறப்புக்கள் கொண்டதாக மாசி மாதம் இருக்கிறது. இந்த மாசி மாதத்தில் வருகிற மாசி அமாவாசை தினத்தின் சிறப்புக்கள் மற்றும் பலன்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடுங்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதம் ஆகும். இந்த மாசி மாதத்தில் ஆன்மீக சிறப்புமிக்க மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலி பண்டிகை போன்ற பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேலும் பல சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் தீர்த்தவாரி விழாக்களும் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்த மாசி மாதத்தில் வரும் மாசி அமாவாசை தினமும் ஒரு முக்கியமான தினமாகும்.

- Advertisement -

மாசி அமாவாசை தினமான நாளை அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம், திதி போன்றவற்றை தர வேண்டும். இந்த சடங்குகளை முடித்த பின்பு சிராத்த சடங்குகளை செய்வித்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது.

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். திருஷ்டி கழித்து உடைபவர்களுக்கு தட்சிணை கட்டாயம் தர வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.

- Advertisement -

மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்கள் போன்றோர்களுக்கும் சேர்த்து பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, உடலாரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயில் சிறப்புகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Masi amavasya 2019 in Tamil. It is also called as Amavasai tharpanam in Tamil or Masi matham in Tamil or Amavasai valipadu in Tamil or Masi matham sirappugal in Tamil.

- Advertisement -