- Advertisement -

மாதக் கடைசி நாள் செய்யக்கூடாத காரியங்கள்

- Advertisement -

ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாள் எந்த அளவிற்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளும் மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் இந்த மாதத்தில் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் வருகின்ற மாதத்தில் தொடரக்கூடாது என்பதற்காக சில வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை தவிர்த்து நாம் செய்யக்கூடிய செயல்களாலும் நமக்கு கஷ்டங்கள் தொடரும். அந்த செயல்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாதக் கடைசி நாள் வழிபாடு

வாழ்க்கையில் கஷ்டம் என்பது வந்து கொண்டு தான் இருக்கும். அந்த கஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்குரிய முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியை பெறுவது தான் நம்முடைய வாழ்க்கையின் ரகசியமாகவே அமைகிறது. அந்த வகையில் நம்மை அறியாமலேயே நாம் சில தவறுகளை செய்வதன் மூலம் நாம் வாழ்வில் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இதை செய்யக்கூடாது என்று தெரியாமல் சாதாரணமாக செய்கின்ற செயல் தானே என்ற செய்துவிடுவோம். அதனால் தான் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்பது கூட நம்மால் உணர முடியாது. அப்படிப்பட்ட சில செயல்களைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த செயல்களை ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் நாம் கண்டிப்பான முறையில் செய்யவே கூடாது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று மாதத்தின் கடைசி நாளில் கடன் வாங்க கூடாது. இரவலாக எந்த ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து வாங்க கூடாது. தங்க நகைகளை அடமானம் வைக்க கூடாது. அது எந்த கிழமையாக இருந்தாலும் சரி. பொதுவாக பலரும் மாத இறுதியில் தான் கையில் பணம் இல்லை என்பதற்காக பிறரிடம் இருந்து கடன் வாங்குவார்கள். அப்படி வாங்க கூடிய கடனை நம்மால் எளிதில் அடைக்கவே முடியாது என்று கூறப்படுகிறது. அதனால் மாத இறுதி நாளில் கடன் வாங்குவது, இரவல் வாங்குவது, அடமானம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அதேபோல் நாம் மனவருத்தப்பட்டு சாபம் இடக்கூடாது. தெரிந்தோ தெரியாமலோ நம்மை அறியாமல் நம்முடைய வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் பிறருக்கு எந்த அளவிற்கு பாதிப்பை தருமோ அதே அளவிற்கு நமக்கும் பாதிப்பை தரும். அதனால் முடிந்த அளவு கோபம் கொள்ளாமல் யாருக்கும் சாபம் தராமல் அதே சமயம் யாருடைய கோபத்திற்கும் ஆளாகாமல் சாபத்தை வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மேலும் அன்றைய தினத்தில் கண்டிப்பான முறையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். காலையிலோ அல்லது மாலையிலோ முடிந்தவர்கள் இரண்டு வேளையுமே தீபம் ஏற்றலாம். காலையில் ஏற்றிய தீபத்தை இரவு வரை அணையாமல் பார்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பை தரும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.

அதே போல் மாதத்தின் இறுதி நாளில் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வீட்டுக்கு திருஷ்டி சுத்தி போடுவது என்பது நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய ஒன்றாக திகழும். இதே போல் மாதத்தின் இறுதி நாளில் விநாயகப் பெருமானுக்கு சிதர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதன் மூலம் இதுவரை நமக்கு இருந்த தடைகளும் கஷ்டங்களும் தவிடு பொடியாகும்.

இதையும் படிக்கலாமே: பணம் வசியமாக திலகம்

மிகவும் சாதாரண செயல்களாக திகழக்கூடிய இந்த செயல்களை சரியாக நாம் செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -