- Advertisement -

குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் செயல்பட பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய காரணிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழக்கூடியது தான் கல்வி அறிவு. நாம் எந்த அளவிற்கு நன்றாக படித்து தேர்ச்சி பெறுகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உயர் பதவிகளை பெற வேண்டும், சமுதாயத்தில் மதிப்பு மரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் உயர் கல்வி படித்து அதன் மூலம் பல சாதனைகளை படைக்கும் முயற்சி செய்வார்கள். அதனால் தான் இன்றைய காலத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அப்படி படிக்க வைக்கும் பொழுது குழந்தைகள் நன்றாக படித்துவிட்டால் எந்த கவலையும் இருக்காது. அதற்கு பதிலாக படிப்பில் ஆர்வமில்லாமலையோ அல்லது எவ்வளவு படித்தாலும் அது மனதில் தங்காமலோ அப்படியே மனதில் பதிந்தாலும் பரிட்சை எழுதும் பொழுது அவை அனைத்தும் மறந்துவிட்டாலோ அவர்களுக்கு மந்த புத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மந்த புத்தியை நீக்கி புத்தி கூர்மையுடன் செயலாற்றுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் செயல்பட பரிகாரம்

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஏனெனில் வியாழன் குருவின் ஆதிக்கம் நிறைந்த நாள் அன்றைய தினம் காலையிலோ, மாலையிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இரவு நேரத்தில் மட்டும் செய்வதை தவிர்க்க வேண்டும். இதை எந்த குழந்தைகளுக்கு புத்தி கூர்மை வேண்டுமோ அந்த குழந்தைகள் கைப்பிட தான் செய்ய வேண்டும். சிறு குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பரிகாரத்தை மட்டும் குழந்தைகளை செய்ய சொல்லிவிட்டு முன்னேற்பாடாக செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் பெற்றவர்கள் செய்யலாம்.

இதற்கு நமக்கு முதலில் அரிசி மாவு வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டி அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக பிணைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள். மொத்தம் ஐந்து உருண்டைகள் தேவைப்படும். பிறகு ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒரு பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய ஏலக்காய், கொட்டை நீக்கிய பேரிச்சம் பழத்தை வைத்து மூட வேண்டும். இப்படி ஐந்து உருண்டைகளிலும் செய்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு உருண்டைக்கு மேலே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அதற்கு மேலே ஒரு சிறிய கட்டி வெல்லம் என்று வைக்க வேண்டும். இப்படி தயார் செய்து விட்டு அருகில் பசுமாடு இருக்கும் இடத்திற்கு சென்று குழந்தைகளின் கையால் இந்த உருண்டையை பசு மாட்டிற்கு தர சொல்ல வேண்டும். ஒரே மாட்டிற்கு ஐந்து உருண்டைகளை தரலாம். அங்கு பசு மாடுகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மாட்டிற்கும் ஒவ்வொரு உருண்டை என்று கூட தரலாம்.

இப்படி தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் குழந்தைகள் கைப்பட பசு மாட்டிற்கு இந்த பொருட்களை கொடுப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைத்து புத்தி கூர்மையுடன் செயலாற்றி சிறப்பாக படிப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி பரிகாரம்

நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நமக்கு நல்ல வாழ்க்கையை தரக்கூடிய பசு மாட்டிற்கு இந்த முறையில் குழந்தைகளின் கையால் உணவளிக்கும் பொழுது குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -