- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க மகாலட்சுமி பரிகாரம்

பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி பரிகாரம்

- Advertisement -

பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கிறது. அந்த பணவரவை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாமல் தடைப்பட்டு நிற்கும். அதனால் பல கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையும் உண்டாக்கும். அதேபோல் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை அறியாத நபர்களும் இந்த முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய விரைவிலேயே அதிர்ஷ்டம் ஏற்படுவதோடு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி பரிகாரம்

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை மனதார நாம் வழிபடும் பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும் என்று பலரும் அறிந்திருப்போம். மகாலட்சுமியின் மந்திரங்களை கூறுவது, மகாலட்சுமி பூஜை செய்வது என்று பல வழிமுறைகளில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வோம். அதே சமயம் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபாடு செய்வதும் உண்டு. இந்த பதிவில் அப்படிப்பட்ட ஒரு தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய பொருட்கள் பல இருக்கின்றன. அந்த பொருட்கள் நம்முடைய வீட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் மகாலட்சுமி தாயார் வாசனை மிகுந்த பொருட்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் என்பதால் அவளை வழிபடும் பொழுது வாசனை மிகுந்த பொருட்களை நாம் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி வாசனை மிகுந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஏலக்காய். இந்த ஏலக்காயை நாம் முறையாக மகாலட்சுமி தாயார் இடம் வைத்து வழிபாடு செய்து உபயோகப்படுத்தினோம் என்றால் நமக்கு பணவரவு ஏற்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதற்கு நமக்கு ஐந்தே ஐந்து ஏலக்காய் இருந்தால் போதும். உடையாத நல்ல ஏலக்காயாக பார்த்து ஐந்து ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற துணி இல்லாதவர்கள் வெள்ளை நிற துணியை சுத்தம் செய்து அதில் மஞ்சள், பன்னீர் ஊற்றி மஞ்சள் நிற துணியாக மாற்றி நிழலில் காயவைத்து எடுத்துக் கொண்டால் அதற்கு இன்னும் பலன் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

இப்பொழுது ஐந்து ஏலக்காயை அந்த மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் இந்த முடிச்சை வைத்து உங்களுடைய பெயர், நட்சத்திரம் இவற்றை கூறி அர்ச்சனை செய்து மகாலட்சுமி தாயாரை மனதார வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த முடிச்சை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.

வீட்டிற்கு வந்த பிறகு இந்த முடிச்சை உங்களுடைய பணம் இருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்றும் பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முடிச்சை தங்களுடனே வைத்துக் கொண்டால் எந்த காரியத்திற்கு செல்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகி அதிர்ஷ்டம் ஏற்பட்டு அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய கூற வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையான இந்த ஏலக்காய் பரிகாரத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து மேற்கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்