- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

துரதிர்ஷ்டம் நம் வீடு தேடி வர இதுவும் ஒரு முக்கிய காரணம்.

மகாலட்சுமி குடியிருக்க வேண்டுமென்றால் நம் வீட்டில் தரித்திரமும், துரதிஷ்டமும் குடியிருக்கக்கூடாது. அந்த மகாலட்சுமியானவள் வாசம் செய்வதற்காக நம்மால் முடிந்தவரை நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். அதுமட்டுமல்லாமல் எந்த திசையில் எதையெல்லாம் வைக்க வேண்டும், என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்த்து முறைப்படி எல்லா பொருட்களையும் அந்தந்த இடத்தில் வைத்து இருப்போம். இப்படி வாஸ்து சாஸ்திரப்படி பெரிய விஷயங்களில் எல்லாம் கவனமாக இருப்பவர்கள், தான் செய்யும் சிறிய தவறின் மூலம் எல்லா பலன்களையும் அடைய முடியாமல் தவற விட்டு விடுவார்கள். அப்படி நம் வீட்டில், நாம் செய்யும் ஒரு சிறிய தவறின் மூலம் அந்த மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காமல் போகிறது. அது என்ன தவறு என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நம் வீட்டில் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்தான் சீப்பு. இந்த சீப்பை தலைசீவிய உடன் நாம் சுத்தம் செய்கிறோமா, என்று கேட்டால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். தலையை சீவி விட்டு அதில் உள்ள முடியை கூட நீக்காமல் அப்படியே வைத்து விடுவார்கள். இது நம் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

எப்படி? வீட்டில் நோன்பு சமயங்களில் அந்த மகாலட்சுமிக்கு கண்ணாடி, சீப்பு, வளையல் இவைகளை படைப்பதை வழக்கமாக வைத்திருப்போம். நாம் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளிலும் அந்த மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது உண்மை. நம் தலையை சீர்படுத்தும் சீப்பிலும் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். இதுவும் நம் அழகுக்காக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் தானே. இதனால் இந்த சீப்பை தலையை சீவி உடனேயே சுத்தம் செய்துவிடவேண்டும். நம் வீட்டில் தரித்திரம் சேர சீப்பை அழுக்காக வைப்பதும் ஒரு முக்கிய காரணம் தான்.

தலை சீவி விட்டு உடனடியாக சீப்பின் உள்ள முடியை  நீக்கிவிடவேண்டும். நீக்கிய முடியை ஒரு பேப்பரில் மடித்து குப்பை கூடையில் போட்டு விடவேண்டும். தலைமுடியை வீட்டினுள் காற்றில் அலைய விடக்கூடாது. அது இன்னும் பெரிய தரித்திரத்தை நம் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்து விடும். மாதத்திற்கு ஒரு முறை உங்களது சீப்பை கழுவி சுத்தம் செய்துவிடுங்கள். இதேபோல் பற்கள் நீங்கிய சீப்பையும், அதிகமாக தேய்ந்த சீப்பையும் உபயோகப்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட சீப்பை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு புதிய சீப்பை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -

நாம் அறியாமல் செய்யப்படும் சிறிய தவறுகளினால், நாம் செய்யும் பெரிய பரிகாரங்களுக்கு பலன் கிடைக்காமல் போய் விடுகிறது. இனி உங்களது சீப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது உங்கள் கடமை. இது உங்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலையை சீவும் சீப்பு என்று சொன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இந்த நவநாகரீக உலகத்தில் லூஸ் ஹேர் என்று சொல்லப்படும் தலைவிரி கோலமானது பெண்களுக்கு நாகரீகம் ஆகிவிட்டது. நம் முன்னோர்கள் இதை அமங்கலமாக கூறுவார்கள். இதனால் பெண்கள் முடிந்தவரை தங்களது தலை முடியை வாரி கட்டிக்கொள்வது நல்லது. இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக்  கொடுப்பதும் நம் கடமை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vettil thurathistam in Tamil. Misfortune in home Tamil. Vettil thurathistam vara karanam. Vettil thurathistam reason Tamil.

- Advertisement -