
பொதுவாகவே சாய்பாபா வழிபாடு என்றாலே எல்லோரும் வியாழக்கிழமை அன்றுதான் செய்கின்றோம். ஆனால் உங்களுடைய பொருளாதார நிலமை முன்னேற, வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக மாற வேண்டும் என்றால், சாய்பாபாவை திங்கட்கிழமை இப்படி கும்பிடணும். சாய்பாபாவை நம்பிக்கையோடு கும்பிட்டால், அவர் யாரையுமே கைவிடமாட்டார். சாய்பாபா பக்தர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
மனிதர்களாக இந்த பூமியில் பிறந்து, மகானாக மாறியவர்களை வழிபாடு செய்யும்போது, ஒரு கூடுதல் பவர் கட்டாயம் கிடைக்கும். இதை மகான் வழிபாடு செய்பவர்கள், நிச்சயமாக உணர்வார்கள். நீங்களும் மகான் வழிபாடுகளை செய்ய துன்பங்கள் விலகும். உங்களுடைய தலையெழுத்தும் மாறும். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, நான் பரம்பரை ஏழை என்பவர்கள் கூட, பரம்பரை பணக்காரனாக மாற இந்த வழிபாடு ஒரு வழியை காட்டி தரும்.
உங்களுடைய வீட்டின் அருகில் சாய்பாபா ஆலயங்கள் ஏதேனும் இருந்தால், வாரம் தோறும் திங்கட்கிழமையில் சாய்பாபா கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் அமர்ந்து “ஓம் ஸ்ரீ சாய்ராம்” என்ற மந்திரத்தை 108 முறை கண்களை மூடி உச்சரித்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். சாய்பாபாவிற்கு விருப்பமான வாசனை நிறைந்த ஊதுவத்தி, பூக்களை வாங்கிக் கொண்டு போய் கோவிலுக்கு கொடுத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வழிபாட்டை விட திங்கட்கிழமை சாய்பாபா கோவிலுக்கு செல்லும்போது நம்பிக்கைதான் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்க வேண்டும். திங்கட்கிழமை சாய்பாபாவை வழிபாடு செய்கின்றோம். நிச்சயம் நாமும் பணக்காரராக மாறுவோம், நம்முடைய வறுமையும் சீக்கிரம் நீங்கும் என்று ஆழ்மனதில் ஒரு நம்பிக்கையை வையுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் சாய்பாபாவின் ஆலயம் இல்லையா.
வீட்டிலேயே சாய்பாபாவை மனதார நினைத்து ஒரு விளக்கு ஏற்றுங்கள். உங்கள் வீட்டில் சாய்பாபா சிலை திருவுருவப்படம் எதுவுமே இல்லையா. கவலையே வேண்டாம். மனசு முழுவதும் சாய் பாபாவை நினைத்துக்கொண்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜையறையில் வந்து அந்த தீபச்சுடர் தான் சாய்பாபா என்று நினைத்து ஓம் ஸ்ரீ சாய்ராம் என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். சாய்பாபாவை வழிபாடு செய்வதற்கு பெருசாக எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.
ஒரு டம்ளரில் தண்ணீரை பூஜை அறையில் வைத்துவிட்டு, சாய்பாபாவை கூப்பிட்டு, உங்களுடைய வரங்களை கேளுங்கள். வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, இரண்டு ஊதுவத்தியை காண்பித்து பூஜையை நிறைவு செய்துவிட்டு, அந்த தண்ணீரை எடுத்து குடித்து விடுங்கள். இவ்வளவு தான் வழிபாடு.
உங்கள் வீட்டில் சாய்பாபா சிலை வடிவில் இருந்தால் அவருக்கு நிச்சயமாக தினம் தினம் நெய்வேதியம் வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் சக்கரை, இரண்டு கற்கண்டு எதாவது நெய்வேத்தியம் வைப்பது சிலை வழிபாட்டிற்கு நிச்சயம் முக்கியம். வாரம் தோறும் திங்கட்கிழமை விடாமல் சாய்பாபா, மந்திரத்தை சொல்லி சாய்பாபா வழிபாட்டை செய்து, சாய்பாபா பாதத்தை பற்றி கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: வாரம் முழுவதும் வெற்றி தரும் கயிறு பரிகாரம்
ஒரு வருடம் அல்ல ஒரு மாதத்தில் உங்கள் வாழ்க்கையில், முன்னேற பல வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்ட துவங்கிவிடும். பிறகு நீங்கள் பெரிய செல்வந்தர்களாக மாறலாம். நீங்கள் மட்டுமல்ல உங்கள் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கூட உங்களுடைய செல்வங்கள் அழியாமல் போய் சேர அந்த சாய்பாபா நல்லதொரு வழியை காட்டி தருவார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.