- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாரம் முழுவதும் வெற்றி தரும் கயிறு பரிகாரம்

வாரம் முழுவதும் வெற்றி தரும் கயிறு பரிகாரம்

- Advertisement -

ஆன்மீகம் சார்ந்த இந்த கயிறு பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு, வாழ்க்கையில் வெற்றியை எப்படி சீக்கிரம் அடைவது, நம் குறிக்கோளில் தடைகள் வராமல் இருக்க என்ன செய்வது, நம்முடைய எண்ணங்களை எப்படி மாற்றினால், முயற்சிகளில் தடை வராமல் இருக்கும் என்பதை பற்றிய ஒரு சின்ன மேனிஃபேஸ்டேஷன் (manifestation) மெத்தடை முதலில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பிறகு அந்த ஆன்மீகம் சார்ந்த கயிறு பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடு எப்படி இருக்கிறதோ, நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொண்டு, நேர்மறையான விஷயங்களை சிந்திக்கும் போது, நம்முடைய வாழ்க்கை பாதை நல்லபடியாக செல்லும். உதாரணத்திற்கு அவசர அவசரமாக வண்டி ஓட்டிக்கொண்டு செல்கின்றோம்.

- Advertisement -

டிராஃபிக்கில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் நம் ஆழ் மனதிற்குள் இருக்குமே தவிர, டிராபிக் இல்லாமல் சென்றடைய வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் சென்று அடைவோம் என்ற நம்பிக்கை நமக்கு குறைவாகவே இருக்கும். இந்த நம்பிக்கையை உயர்த்தக் கூடியது தான் மேனிஃபேஸ்டேஷன். நேர்மறையான எண்ணத்தோடு டிராபிக்கில் சிக்கிக் கொள்வோமோ, என்ற எண்ணத்தை தவிர்த்து விட்டு, நம் செல்லக்கூடிய இடத்திற்கு சரியாக சென்று விடுவோம் என்ற நம்பிக்கை உங்களுடைய ஆழ் மனதில் எப்போது தோன்றுகிறதோ, அப்போது நீங்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள்.

இதுபோல எண்ணங்களை முதலில் நேர்மறையாக மாற்றி விட்டாலே, வாழ்க்கையில் இருக்கும் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அடுத்த மாதம் வருமானத்திற்கு என்ன செய்யப் போகின்றோம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து விடுமோ என்று பயப்படக்கூடாது. அடுத்த மாதம் பணம் வரும். அடுத்த மாதம் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும் என்று நம்பி வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டால், நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி காண்பீர்கள். இதுபோல தான் எல்லா விஷயங்களிலும் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையோடு இருக்க வேண்டும்.

- Advertisement -

வெற்றி தரும் கயிறு பரிகாரம்

சரி இப்போது நாளைய தினம் வாரத்தில் துவக்க நாள், திங்கட்கிழமை. இந்த வாரம் முழுவதும் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய 7 நல்ல காரியங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஏழு நல்ல காரியங்களும் நல்லபடியாக தான் நடக்கும் என்று நம்பி இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

அன்றாட வேலைகளை அன்றாடம் செய்து முடிப்பேன். வேலையில் சுறுசுறுப்போடு நடந்து கொள்வேன். நிறைய தண்ணீர் குடித்து உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வேன். நிறைய பணம் சம்பாதிக்க எனக்கான வழிகள் கிடைக்கும். இதுபோல நேர்மறையாக ஏழு விஷயங்களை சொல்லுங்கள். நீங்கள் ஒரு இடத்தில் வேலை செய்கிறீர்கள், அல்லது வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், அந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் எதில் ஜெயிக்க வேண்டுமோ அந்த விஷயங்களை சொல்லியும் அந்த கயிறில் நேராக 7 முடிச்சுகள் போடலாம். ஏழு வெவ்வேறு குறிக்கோள்களை சொல்லலாம் தவறு கிடையாது.

- Advertisement -

ஒரு கோவிலில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்து இறைவனை பிரார்த்தனை செய்து, அந்த கயிறை உங்கள் கையில் கட்டிக் கொண்டால், இந்த வாரம் உங்களுக்கு எப்படி செல்கிறது என்று நீங்களே பாருங்கள். கடந்த வாரம் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கும், இந்த வாரம் தீர்வு கிடைத்து விடும். இந்த வாரம் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக திகழும். அதற்கு இந்த 7 முடிச்சு போட்ட கயிறு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சித்திரை அமாவாசை இரவு கடன் தீர்க்கும் பரிகாரம்

நீங்கள் மனதில் எந்த குறிக்கோளை வைத்து 7 முடிச்சு போட்டீங்களா அதை இந்த வாரத்திற்குள் நீங்கள் செய்து முடித்து விடுவீர்கள். இந்த கயிறை பார்க்கும் போதெல்லாம் முடிச்சு போட்ட வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணம் உங்களுடைய சுறுசுறுப்புக்கு தூண்டுதலாக இருக்கும். பிள்ளையார் கோவில் சிவன் கோவில் அம்மன் கோவில் எந்த கோவிலில் அமர்ந்தும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். இது ஒரு சின்ன, நம்பிக்கை தரும் பரிகாரம் தான். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

சற்று முன்