- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

மூலிகை சீயக்காய் தூள் எப்படி அரைப்பது என்று உங்களுக்கு தெரியுமா? இதோ துல்லியமான அளவுகளில் உங்களுக்கான பட்டியல்.

- Advertisement -

இப்போது தலைமுடி உதிர்வதற்கு ஒரு காரணம் ஷேம்பில் இருக்கும் செயற்கையான பொருட்களும் தான். என்னதான் விலை உயர்ந்த கெமிக்கல் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தினாலும், இயற்கைக்கு அந்த ஷாம்பு ஈடாகுமா. அந்த காலத்தில் இருந்து நீண்ட கூந்தலை வைத்திருக்க கூடிய நம் நாட்டு பெண்கள் பயன்படுத்தியது சீயக்காய் தூள் தான். அந்த சீயக்காய் தூளை, சில மூலிகை பொருட்கள் எல்லாம் சேர்த்து எப்படி அரைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். முடி வளர்ச்சிக்கு இந்த சீயக்காய் தூள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப உதவி செய்யும்.

மூலிகை சீயக்காய் தூள் அரைக்கும் முறை:
சீயக்காய் – 1 கிலோ, ஆவாரம்பூ – 150 கிராம், ரோஜா இதழ் – 150 கிராம், கருவேப்பிலை – 150 கிராம், மருதாணி இலை – 150 கிராம், எலுமிச்சம் பழத்தோல் – 10 நம்பர், பூலாங்கிழங்கு – 200 கிராம், பூந்திக்கொட்டை (கொட்டை நீக்கியது) – 200 கிராம், வசம்பு – 7 நம்பர், வெட்டி வேர் – 200 கிராம், மஞ்சள் கரிசலாங்கண்ணி – 150 கிராம், செம்பருத்தி இலை – 50 கிராம், செம்பருத்தி பூ – 30 நம்பர், வேப்ப இலை – 50 கிராம், காட்டு நெல்லி – 200 கிராம், இந்த பொருட்கள் எல்லாமே காய்ந்ததாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் நீங்கள் எல்லா பொருட்களையும் வாங்கி நன்றாக காய வைக்கவும். வெட்டிவேரை மட்டும் துண்டு துண்டாக கத்திரிக்கோலால் வெட்டி போடுங்கள். அப்போதுதான் நன்றாக அரைபடும். இதில் வெந்தயம் சேர்க்கப்படவில்லை. அது உங்களுக்கு உடம்புக்கு ரொம்பவும் குளிர்ச்சி தரும் என்றால், தவிர்த்துக் கொள்ளலாம். தேவை என்பவர்கள் 100 கிராம் வெந்தயத்தையும் இந்த சீயக்காயோடு சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றாக எல்லா பொருட்களும் காய்ந்த பிறகு ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சீயக்காய் பொடியை நன்றாக ஆற வைத்து ஒரு காற்று போகாத டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். இந்த சீயக்காய் தூள் எப்படி பயன்படுத்துவது. உங்களுடைய வீட்டில் அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருக்கும் அல்லவா. அது தேவை.

- Advertisement -

முந்தைய நாள் அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் மூடி போட்டு அப்படியே எடுத்து வையுங்கள். மறுநாள் அது புளித்த கஞ்சி தண்ணீர் ஆகும். அதில் இந்த சீயக்காய் தூள் போட்டு நன்றாக கலந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊற வைத்து அந்த சீகைக்காயை தலையில் போட்டு கசக்கி தலைக்கு குளித்தால், முடிக்கும் அவ்வளவு நல்லதுங்க.

இதையும் படிக்கலாமே: நரைமுடி வராமல் தடுக்க நல்லெண்ணெயில் இந்த 1 பொருளை சேர்த்து பாருங்க! கருகருன்னு உங்க முடியும் வயதான தோற்றத்தில் இருந்து விரைவில் மாறனுமா?

சில பேருக்கு இப்படி சியக்காய் தூளை அரைத்து தலைக்கு போட்டு தேய்த்து குளித்தாலும் முடி கொட்ட பிரச்சனை நிற்கவில்லை என்றால் உங்களுடைய உடம்பில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். ஊட்டச்சத்து குறைபாடு ரத்த குறைபாடு அல்லது ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியம் உங்களுக்கு சரியில்லை எனும் பட்சத்தில் நீங்கள் மருத்துவரை நிச்சயம் பார்ப்பது நல்லது. ஆரோக்கிய குறைப்பாட்டை சரி செய்த பின்பு இந்த மூலிகை சீயக்காய் பொடியை பயன்படுத்தி வர முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகு குறிப்பு படித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -