
பெண்கள் என்றாலே அழகு தான் அதிலும் அவர்கள் முடி நல்ல நீளமாக கருகருவென்று சுருண்டு வளர்ந்து இருந்தால் அழகோ அழகு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் முடியை அப்படி வளர்ப்பதெல்லாம் சாதாரணமான விஷயமே கிடையாது. முன் காலத்தில் எல்லாம் முடி என்றாலே முழங்காலுக்கு கீழே இருந்தால் தான் அதை முடியாக எடுத்துக் கொள்வார்கள். இப்போது எல்லாம் பாப் கட்டிங் செய்து முடியை யாரும் வளர்க்கவும் விரும்புவதில்லை காரணம் முடி சரியாக வளர்வதில்லை என்பது ஆக கூட இருக்கலாம். எவ்வளவு சிறிய முடியாக இருந்தாலும் அது பார்க்க கருகருவென்று அழகாக இருந்தால் தானே நீங்கள் எந்த அலங்காரம் செய்தாலும் நன்றாக இருக்கும். அப்படி ஒரு முடியை பெற இந்த ஆயிலை தொடர்ந்து தேய்த்து வந்தால் போதும் நீங்கள் விரும்பிய அளவுக்கு முடியை வளர்க்கலாம். இதோ அந்த ஆயில் தயாரிக்கும் முறை.
இந்த எண்ணெயை தயாரிக்க தேவையான பொருட்கள் அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் அரைத்து பொடி செய்த கறிவேப்பிலை 250 கிராம், அரை டீஸ்பூன் வெந்தயம். கருவேப்பிலை நன்றாக நிழலில் காய வைத்து ஈரம் இல்லாமல் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்தால் கருவேப்பிலை இலைகள் பொடி போல கிடைக்கும் அதை 250 கிராம் அளவிற்கு அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணையை தயாரிக்க இரும்பு கடை இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்று முடி வளர்ச்சிக்கு தேவையான எண்ணெய்களை காய்ச்ச இந்த இரும்பு கடாய் தான் மிகவும் சிறந்தது. அது இல்லை என்றால் அடி கனமான சில்வர் பயன்படுத்திக் கொள்ளலாம் நான் ஸ்டிக், அலுமினியம் போன்றவை எந்த காரணத்தில் கொண்டும் இதுபோல ஹேர் ஆயில் வேறு எந்த மருந்து சம்பந்தமான பொருட்களுக்கும் பயன்படுத்தக் கூடாது.
அடுப்பை பற்ற வைத்து இரும்பு கடாய் வைத்து கடாய் நல்ல சூடான பிறகு அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் தேங்காய் எண்ணெயில் கலப்படம் இருந்தால் நீங்கள் தயாரிக்கும் இந்த எண்ணெய் உங்களுக்கு பலனளிக்காது.
இந்த எண்ணெய் காய்ந்தவுடன் சூடான எண்ணெயில் அரைத்த கறிவேப்பிலையை சேர்த்த பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விடுங்கள். கறிவேப்பிலை சேர்த்த பிறகு அடுப்பு அதிக தீயில் இருக்கக் கூடாது. அதன் பிறகு அரை டீஸ்பூன் வெந்தயத்தை பொடித்து அதையும் இந்த எண்ணெயில் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விட்ட பிறகு 5 லிருந்து 10 நிமிடம் வரை கூட மிதமான சூட்டில் அப்படியே இருக்கட்டும்.
அப்போது தான் கறிவேப்பிலையில் இருக்கும் மொத்த சாறும் அந்த எண்ணெயில் இறங்கும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். எண்ணெய் நன்றாக ஆறிய பிறகு ஒரு மெல்லிய துணி வைத்து இந்த எண்ணெய் வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தலைக்கு குளிக்க ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த எண்ணெய் உங்கள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்த பிறகு, நீங்கள் எப்போதும் போல் தலை கசக்கி கொள்ளலாம். இது வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் நல்லது. ஆனால் தலைக்கு குளித்த பிறகு இந்த எண்ணெய் வைக்கக்கூடாது. வெந்தயம் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக்கூடியது. அப்படி வைக்கும் போது சளி பிடித்து விடும் வாய்ப்பு அதிகம். இதை முதன் முதலில் தேய்க்கும் போது கொஞ்சமாக தேய்த்து பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு நல்ல தாராளமாக எண்ணெய் வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்டாக ஃபேஷியல் செய்த முகம் வேண்டுமா? வெளியே கிளம்புவதற்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடி இப்படி செஞ்சு பாருங்க உடனடி பொலிவு நிச்சயம் கிடைக்கும்!
இந்த முறையை ஆரம்பம் முதலில் செய்து வந்தால் முடி உதிர்வு, நரைமுடி, முடி கொட்டுதல், பொடுகு எந்த முடி சம்பந்தமான பிரச்சனையும் வரவே வராது. இதுவரை நமக்குத் தெரியாது இருந்தாலும் பரவாயில்லை தெரிந்த பிறகு இந்த ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி நல்ல அழகான நீண்ட கருகரு கூந்தலை வளர்த்துக் கொள்ளுங்கள்.