- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் காய்கள்.

- Advertisement -

முடி உதிர்வு என்பது அனைவருக்கும் இருக்கும் பிரச்சினை தான். இருந்தாலும் அதை சரி செய்வதற்காக பல விதங்களில் நாம் முயற்சி செய்வோம். அப்படி முயற்சி செய்யும் சில விஷயங்களாக ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க், ஷாம்பூ என்று கடைகளில் இருந்தும் அல்லது நாமே வீட்டில் தயார் செய்து உபயோகப்படுத்துவோம். இதனால் மட்டும் முடி வளர்ச்சி என்பது ஏற்படாது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடி உதிர்வை தடுத்து முடியை ஆரோக்கியமாக வளர வைக்க உதவக்கூடிய காய்கறிகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக முடி உதிராமல் இருப்பதற்கு நம்முடைய முடி மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்படி சத்து மிகுந்ததாக இருப்பதற்கு வெளியில் பூசக்கூடிய பூச்சுகள் மட்டும் அல்லாமல் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையில் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய உணவுகளை பார்ப்போம்.

- Advertisement -

இதில் முதல் இடத்தை பிடிப்பது பசலை கீரை. பொதுவாக கீரை வகைகளை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரும்பு சத்து அதிகமாக கிடைத்து. முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கக் கூடிய கீரைகளில் மிகவும் முக்கியமான கீரையாக கூறப்படுவது தான் பசலை கீரை.

இந்த பசலை கீரையை நாம் பொறியியலாக செய்து சாப்பிடாமல் கூட்டாக செய்து சாப்பிடும் பொழுது உடலில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படும். எந்த உடலில் உறுப்புகள் நன்றாக செயல்படுகிறதோ அந்த மனிதரின் முடி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

- Advertisement -

இரண்டாவதாக நாம் பார்ப்பது தான் வாழைப்பூ. இங்கிலீஷ் காய்கறிகள் என்று சொல்லக்கூடிய காய்கறிகளை தான் இன்றைய காலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அந்த இங்கிலீஷ் காய்கறிகளை விட மிகவும் மலிவாக அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகவும் இருக்கக்கூடியது தான் நம்முடைய நாட்டு காய்கறிகள். அதில் பெண்களுக்காகவே வரப் பிரசாதமாக திகழக்கூடிய ஒரு காய் என்றால் அதுதான் வாழைப்பூ.

இந்த வாழைப்பூ பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் சிறப்பானதாக செயல்படுகிறது. கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது. எந்த பெண்ணின் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்தப் பெண்ணின் முடி வளர்ச்சி என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். அதே சமயம் முடி உதிர்வு என்பது இருக்காது.

- Advertisement -

இந்த இரண்டு காய்களை நாம் வாரத்தில் இரண்டு நாட்களாவது சாப்பிட்டு வந்தோம் என்றால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய ஹார்மோன்கள் சீராக வேலை செய்வதோடு மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கும். அதனால் நமக்கு முடி உதிர்வு என்பது ஏற்படாமல் முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: அதிக அழகை கொடுக்கும் அதிமதுரம் அழகு குறிப்பு.

எந்த காய்கறியையும் பொரியலாக செய்யாமல் கூட்டாகவோ அல்லது கடைசலாகவோ அல்லது சாராகவோ எடுத்து சாப்பிடும் பொழுது அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -