- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். உங்கள் மீது விழுந்த பழி விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். நீண்ட நாள் குடும்பப் பகுதியில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை மனதிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய நல்ல வாய்ப்புகளும் அமையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். நிச்சயம் நல்லது நடக்கும் லாபமான இந்த நாளை கொடுத்த மகாலட்சுமிக்கு நன்றி சொல்லுங்கள். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும் நிம்மதி இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இனம் புரியாத மன பயம் இருக்கும். குழப்பத்திலேயே இருப்பீர்கள். வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. இதனால் சின்ன சின்ன பின்னடைவுகள் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். வேலையில் உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். வாராக் கடன் வசூல் ஆகும். வீட்டில் இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். இந்த நாள் லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். தங்கம் வாங்கக்கூடிய யோகமும் சில பேருக்கு இருக்கிறது. வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். கெட்டி மேல சத்தம் கேட்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. தாமதத்தால் சில பிரச்சனைகள் வரலாம். முக்கியமான வேலை மீட்டிங் அப்பாயிண்ட்மெண்ட் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, வீட்டில் இருந்து கிளம்பும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது நல்லது. நீங்க செய்ய வேண்டிய வேலையை அரை மணி நேரத்திற்கு முன்பாக செய்து முடிப்பது ரொம்ப நல்லது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்ப்புகள் இருக்கும். புது முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். முன் கோபடக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும். மாணவர்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கவனம் தேவை. சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது ரொம்பவும் நல்லது. உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனதை ஈடுபடும். அம்மன் வழிபாடு மனதிற்கு நிறைவை தரும். வேலை வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பண பிரச்சனை சரியாகும். கடன் சுமை நீங்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு கிடைத்த அவ பெயர் விலகும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். புது வேலைக்கு நீங்க போட்ட அப்ளிகேஷனுக்கு நல்ல செய்தி உண்டு. பிரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்களுக்கு நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி பிறக்கும். நண்பர்களோடு உறவுகளோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். பிரச்சனைக்கான உதவி, பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன் மனைவி பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். ஈகோவில் இருந்து விடுபடுவீர்கள். மனசு லேசாகும். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். தவறுக்கு உண்டான மன்னிப்பையும் கேட்பீர்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -