
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுய நலமான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் மட்டும் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்ட முடியாத சூழ்நிலை உண்டாகும். இருப்பினும் பெரிசாக பாதிப்புகள் இருக்காது. சின்ன சின்ன எதிரி பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உறவுகளுடன், உடன் வேலை செய்பவர்களுடன் சின்ன சின்ன மனஸ்தாபம் ஏற்படலாம். பார்த்து நடந்துக்கோங்க.
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பார்ப்பு அதிகம் இருக்கக் கூடாது. சின்ன ஏமாற்றத்தால் உங்களுடைய தன்னம்பிக்கை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையும் தைரியத்தையும் இழக்காதீர்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்களுடைய முடிவில் தெளிவாக இருக்க வேண்டும். முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலையான நாளாக தான் இருக்கும். சுறுசுறுப்பாக இருக்காது. வேலையில் கவனம் செலுத்த முடியாது. நிதிநிலைமை கொஞ்சம் மோசமாவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படி பலவிதமான பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியத்தை நீங்கள் பெற வேண்டும். அப்போதுதான் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் இன்று நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவிருக்காது. மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். மனதில் இருந்த சஞ்சலங்கள் விலகும். மன அமைதி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். சில பேருக்கு சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகமும் உண்டு.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் இனிமையாக அமையும். மனபாரம் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். உங்கள் மனதில் நீண்ட நாள் தேக்கி வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். மன பாரம் குறையும். பகை விலகும் நல்லது நடக்கும்.
தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த விஷயங்கள் லாபகரமாக மாறும்.
மகர ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். அலட்சியம் வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதியவர்கள் வெயில் சமயத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடைய மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஆளுக்கு ஒரு கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். உங்களுக்கு எந்த முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் வர வாய்ப்பு உள்ளது. நிதானமாக இருங்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை நிலவும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.