
சிலர் நல்ல நிறமாக இருந்தாலும் வெயிலில் சுற்றி கருத்த தேகம் உடையவர்களாக மாறி இருப்பார்கள். அவர்களுடைய முகம், கை, கால், கழுத்துப் பகுதியை தவிர மீதி எல்லா இடங்களிலும் அவர்களுடைய உண்மையான பழைய நிறம் அப்படியே இருக்கும். ஆனால் வெயில் படும் இடங்களில் மட்டும் மிகவும் கருத்துப் போய் அவர்களுடைய உண்மையான நிறமே கருமை போன்று வெளித்தோற்றத்திற்கு தென்பட ஆரம்பிக்கும். இது போன்ற வெயிலில் சுற்றி கருமை அடைந்த இடங்களிலெல்லாம் மீண்டும் பழைய நிறம் பெற இந்த 3 பொருள்கள் கொண்டு தினமும் பேக் போட்டால் போதும். அது என்ன 3 பொருட்கள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
எல்லோருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக நிறையவே மெனக்கெட்டு தன்னைத் தானே பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் இதில் செயற்கையாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது அந்த நேரத்திற்கு நல்ல பலனைக் கொடுக்குமே தவிர நாளடைவில் அது தன் பக்க விளைவுகளையும் காண்பிக்க ஆரம்பிக்கும். அப்போது தான் நமக்கு ஏன் தேவையில்லாமல் அதை எல்லாம் வாங்கி பயன்படுத்தினோம் என்று தோன்றும்.
நீங்களே நினைத்தாலும் மீண்டும் உங்களுடைய பழைய தேகத்தை பெற முடியாமல் போய்விடும் அபாயமும் உண்டு. எனவே கூடுமானவரை முகம் போன்ற மென்மையான பகுதிகளில் செயற்கை ரசாயன கலவைகள் கொண்டுள்ள முக அழகு பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கையாக நம் வீட்டில் கிடைக்கும் மூலிகை பொருட்களை கொண்டே நாம் பேரழகாக மாறி விட முடியும்.
இதற்கு நமக்கு தேவையான முக்கிய மூன்று பொருட்கள் கடலை மாவு, கற்றாழை ஜெல் மற்றும் தயிர். கற்றாழை ஜெல்லை நீங்கள் இயற்கையாக பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது கடைகளில் இருந்து வாங்கும் கற்றாழை ஜெல்லாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சிறிய பௌலில் கடலை மாவு ஒன்றரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கலந்து வைத்து ஒரு பத்து நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் எல்லாம் நன்கு பிரஸ் அல்லது ஸ்பூன் கொண்டு தடவிக் கொள்ளுங்கள். கைகளை பயன்படுத்தி தடவ விரும்பினால் நன்கு கைகளை கழுவிக் கொண்டு பின்னர் கைகளை பயன்படுத்தி ஆன்டி க்ளாக் வைஸ் மற்றும் க்ளாக் வைஸ் என்கிற முறையில் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
ஒரு 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே நன்கு காய விடுங்கள். கடலைமாவு முகத்தில் ஒட்டி முகத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும், அதுவரை அப்படியே அமைதியாக படுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு குளிர்ந்த நீரினால் நன்கு முகத்தை மசாஜ் செய்து கழுவி கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து காலை மாலை அல்லது காலை இரவு என்று ஒரு வாரம் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை மறைந்து உங்களுடைய உண்மையான நிறம் வெளிப்பட ஆரம்பிக்கும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், மாசு, மருக்கள் அனைத்தும் நீங்கி முகம் பளிச்சென மின்னும்.