- Advertisement -
- Advertisement -

பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செலவு செய்து பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேசியல் செய்து கொண்டாலும், இரண்டு நாட்கள் கழித்து தான் முகம் பளிச்சென பொலிவாக மாறும். ஆனால் வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்களை முறையாக இப்படி பயன்படுத்தினால் ஒரே நாளில் முகம் பளபளவென்று பளிங்கு கண்ணாடி மாதிரி இழந்த பொலிவை மீட்டு சிவப்பாக மாறும். முகம் ஒரே நாளில் சிவப்பாக மாற எளிய அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை தொடர்ந்து இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

முகம் பளபளப்பாக மாறுவதற்கு உங்களுடைய ஸ்கின் டோன் எப்படிப்பட்டது? என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வறண்ட சருமமுடையவர்கள், எண்ணெய் பிசுபிசுப்புள்ள சருமம் உடையவர்கள் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். எண்ணெய் பிசுபிசுப்புள்ள சருமம் உடையவர்கள் ஒரு சில பொருட்களை மாற்றி பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் உடையவர்கள் கீழ்காணும் வழிமுறையை பயன்படுத்துங்கள்.

- Advertisement -

வறண்ட சருமம் உடையவர்களுக்கு டிப்ஸ் :

முதலில் ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு பீட்ரூட் தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு உருளைக்கிழங்கு அதே போல தோல் சீவி கொள்ளுங்கள். ஒரு துண்டு தக்காளி கழுவி எடுங்கள். மூன்றும் சம அளவில் எடுத்துக் கொண்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 15லிருந்து 20 நிமிடம் நன்கு உலர விட வேண்டும். உலர்ந்து நன்கு காய்ந்து வந்ததும், முகத்தை குளிர்ந்த நீரினால் அலம்பி கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இது போல செய்து வந்தால் முகம் என்றும் இளமை மாறாமல் கண்ணாடி போலவே ஜொலிக்கும். இந்த ஃபேசியல் பேக் போடும் பொழுது ஒரே நாளில் செம ரிசல்ட் கிடைக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

எண்ணெய் பிசுபிசுப்புள்ள சருமம் உடையவர்களுக்கு டிப்ஸ் :

மேலே கூறியுள்ள படி எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்களும் ஒரு துண்டு உருளைக்கிழங்கு, தக்காளி, பீட்ரூட் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து மிக்ஸர் ஜாரில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் தயிருக்கு பதிலாக ஒரு ஸ்பூன் பால் மற்றும் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்பு இதை நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் நன்கு காய்ந்த பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அலம்பி கொள்ளுங்கள். அவ்வளவுதான், இந்த சிறு மாற்றத்தை நீங்கள் செய்தால் எண்ணெய் பிசுபிசுப்பு முற்றிலும் நீங்கி முகம் டிரையாக நல்ல சிவப்பு நிறமாக மாறும்.

இதையும் படிக்கலாமே:
கஷ்டம் தீர்க்கும் விஷ்ணு சஹஸ்ர மந்திரம்

கடலை மாவுக்கு பதிலாக அரிசி மாவு சேர்க்கலாம். தயிர் சேர்க்க விரும்பாதவர்கள் பால் சேர்க்கலாம். மற்ற மூலப் பொருட்கள் இப்படியே பயன்படுத்துங்கள். இந்த ஃபேஸ் பேக் தினமும் போடக் கூடாது. வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை அதிகபட்சம் போடலாம். உடனடி ரிசல்ட் கொடுக்கக் கூடிய இந்த ஃபேஸ் பேக் போடும் பொழுது முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு போடுங்கள்.

- Advertisement -