இன்றுடன் 2024 வது வருடம் நிறைவடைகிறது. நாளைய தினம் அனைவரும் புத்தாண்டை வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய இறை வழிபாடு, இந்த 2025 வருடம் முழுவதும் நமக்கு நல்ல பலன் தரக்கூடியதாக அமையும், இந்த வருடத்தின் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு நம்மை கடந்து போகட்டும்.
பிறக்கப் போகும் புது வருடம் அனைவருக்கும் புது வசந்தம் வீசட்டும், அந்த இறைவனின் ஆசீர்வாதம் அனைவருக்கும் நிறைவாக கிடைக்கட்டும் என்ற வேண்டுதலை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
2025 ஆவது வருடம் கண்விழித்ததும் சொல்ல வேண்டிய மந்திரம்
புது வருடம் பிறக்கும்போது நாம் பேசுகின்ற முதல் வார்த்தை நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களை நீக்குவதாக இருக்க வேண்டும். புது வருடம் பிறந்ததும் முதலில் எந்த வார்த்தையை சொன்னால், இந்த வருடம் முழுவதும் நாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். உங்கள் மனதிற்கு பிடித்த வார்த்தையை சொல்லலாம்., பிடித்த நபர்களின் பெயரில் எல்லாம் அந்த இறைவன் வாசம் செய்கின்றான். நம் மனதிற்கு பிடித்த பொருட்களிலும் அந்த இறைவன் வாசம் செய்கின்றான்.
உங்களுக்கு உங்களுடைய மனைவியை பிடிக்குமா, குழந்தையை பிடிக்குமா, கணவரை பிடிக்குமா அம்மா அப்பாவை பிடிக்குமா, அவர்களுடைய நாமத்தைச் சொல்லுங்கள். அவர்களுடைய முகத்தை முதலில் தரிசனம் செய்யுங்கள். இது முதல் விஷயம். பிடித்த விஷயங்களை, புது வருடத்தில் பார்க்கும்போதும், பிடித்த நபர்களின் பெயரை உச்சரிப்பதும், நம்முடைய மனதிற்கு இதமான ஒரு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும். அந்த நிம்மதியும் சந்தோஷமும் இந்த வருடத்தை அழகாக நகர்த்திச் செல்லும்.
சில பேருக்கு கடவுளின் மீது அதிக ஆர்வம் இருக்கும். அப்படி இருந்தால் குலதெய்வத்தின் பெயரை 3 முறை சொல்லலாம். இதெல்லாம் போகட்டும் இன்னும் ஏதாவது புது விஷயங்கள் இருக்கிறதா, கடவுளே நம்முடைய கஷ்டங்களை வந்து தாங்கிப் பிடிக்க வேண்டும். நமக்கு அநியாயம் நடந்தால் அந்த இடத்தில் கடவுள் விருந்து நமக்காக நிற்க வேண்டும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதேனும் மந்திரம் இருக்கா. நிச்சயம் இருக்கிறது. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஒரே ஒரு வரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை சொன்னால் உங்களுடைய கஷ்டங்களை அந்த கடவுளே வந்து பார்த்து பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பான்.
நாம் செய்யாத தவறுக்கு, நம் மேல் பழி விழுந்து விட்டது. செய்யாத குற்றத்தில் அடுத்தவர்களால் பழி சுமத்தப்பட்டு தண்டனைக்கு ஆளாகி விட்டோம். பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடவுளே இதை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும், கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான். கடவுளுக்கு கண்ணிருக்கிறது அல்லவா. இப்படி எல்லாம் சொல்லுவோம் அல்லவா. இப்படித்தான் உங்களுடைய கஷ்டத்தை பார்க்க அந்த கடவுளே வரவேண்டும் என்றால் நீங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து சொல்ல வேண்டிய மந்திர வார்த்தை ‘ஓம் ஸர்வத்ருஸே நமஹ”.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆயிரம் நாமங்கள் உள்ளது. அதில் ஒரு நாமம் தான் இது. 201வது மந்திர வார்த்தை இது. இந்த மந்திரத்திற்கு அர்த்தம் என்ன. “எல்லா கஷ்டங்களையும் அந்த கடவுளை பார்த்துக் கொள்வான்”. என்பதுதான் இதன் அர்த்தம்.
இந்த நாமத்தை உச்சரிப்பவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும், நீங்களே எல்லா தவறையும் செய்துவிட்டு, எல்லா அநியாயத்தையும் செய்து விட்டு, கடவுளை காப்பாத்து நீயே இந்த பிரச்சனையை பார்த்துக் கொள் என்று சொன்னால் எதுவும் நடக்காது. உண்மையான பக்தியோடு நேர்மையாக இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திர வார்த்தை இது.
இதையும் படிக்கலாமே: 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வழிபாட்டு முறை
இந்த வார்த்தையை ஜனவரி முதல் தேதி, அதாவது நாளைய தினம் புதன்கிழமை காலை கண் விழித்ததும், யாரிடமும் பேசக்கூடாது. நேராக எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி பெருமாளை நினைத்து, இந்த மந்திர வார்த்தையை 3 முறை சொல்லிவிட்டு அன்றாட வேலையை தொடங்குங்கள். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கான கஷ்டங்கள் விலகும். இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.