- Advertisement -
- Advertisement -

நமக்கு நன்மைகளை செய்யக்கூடியவர்களை தேவர்கள் என்றும் நம்மை பாடாய்படுத்துபவர்களை அசுரர்கள் என்றும் புராணங்களில் கூறியிருக்கிறார்கள். அப்படி நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் அனைத்து விதமான தெய்வங்களும் உள்ளடங்கி தான் இருப்பார்கள். அப்படி அனைத்து விதமான தெய்வங்களின் அருளையும் பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான சமையலறை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நான் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் வைப்பதை விட பிறர் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று வேண்டுதல் வைத்தோம் என்றால் அந்த வேண்டுதலின் பலனால் அவர்கள் நன்மை அடைவதைப் போலவே நமக்கும் நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுயநலமற்ற வழிபாடு சிறந்த வழிபாடு என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி எளிமையான ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொருவர் இல்லத்திலும் பூஜை அறை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சமையலறையும் முக்கியம். பூஜை அறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அதே அளவிற்கு சமையலறையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் தான் சமையலறையை இரவு படுக்கச் செல்வதற்கு முன் சுத்தம் செய்துவிட்டு படுக்க செல்ல வேண்டும். பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

பாத்திரங்களை கழுவி வைப்பதில் நமக்கு ஆரோக்கிய ரீதியாக நன்மைகள் கிடைக்கும் என்றாலும் இரவு நேரத்தில் தான் தெய்வங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும் எந்த வீட்டில் சமையலறை சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டில் தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே போல் தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் இரவு நேரத்தில் ஒவ்வொருவரின் இல்லத்தில் இருக்கக்கூடிய சமையல் அறைக்கு வருவார்களாம்.

- Advertisement -

அப்படி அவர்கள் வரும்பொழுது அவர்களுக்காக நாம் ஏதாவது ஒரு உணவை அடுப்பின் மேல் வைக்க வேண்டுமாம். வெறும் அடுப்பாக வைக்க கூடாதாம். அப்படி அடுப்பின் மேல் நம் வைக்கும் அந்த உணவுப் பொருளை அவர்கள் உண்டு மனதார நம்மை வாழ்த்தி விட்டு செல்வார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. உணவுப் பொருட்கள் இல்லாத பட்சத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் குடிக்கும் தண்ணீரையாவது பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு நாம் வைத்த பிறகு ஒரு மந்திரத்தை கூற வேண்டும்.

மந்திரம்

- Advertisement -

சர்வே பவந்து சுகின:
சர்வே சந்து நிராமயா:
சர்வே பத்ராணி பஷ்யந்து
மாகஷ்சித் துக்க மாக்பவேத்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இந்த மந்திரத்தின் அர்த்தம் என்னவென்றால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித ஜீவராசிகளுக்கும் நன்மைகளை வழங்க வேண்டும் என்பதுதான். இப்படி நாம் பொதுநலமாக வழிபாடு செய்துவிட்டு உறங்கச் செல்லும் பொழுது நம் வீட்டிற்கு வரக்கூடிய தேவர்கள் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதோடு நாம் வைத்த அந்த உணவுப் பொருளையும் ஏற்றுக்கொண்டு மனமார நமக்கு அருள் செய்வார்கள் என்றும் இவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் கோடிஸ்வர வாழ்க்கை அமைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக மூன்றாம் பிறை ரகசியம்

மிகவும் எளிமையான இந்த நாலு வரி மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு நம்முடைய வீட்டு சமையலறையையும் நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.

- Advertisement -