- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் பெருக மூன்றாம் பிறை ரகசியம்

செல்வம் பெருக மூன்றாம் பிறை ரகசியம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஒருவரிடம் செல்வம் இல்லை என்றால் அவரை யாரும் இந்த காலத்தில் மதிப்பது கிடையாது. அன்றைய காலத்தில் குணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை நாம் பெற வேண்டும் என்றால் நம்முடைய முயற்சியோடு தெய்வ அருளும் கண்டிப்பாக வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தாலும் செல்வநிலை உயரவில்லை வறுமை நிலை மாறவில்லை என்று வருத்தப்படுபவர்கள் சந்திர தரிசன நாளான இன்று பச்சரிசியுடன் எந்த பொருளை சேர்த்து வைத்துக்கொண்டு சந்திர தரிசனம் செய்தால் செல்வநிலை உயரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய செல்வ நிலை உயர்வதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருள் நிறைந்த கிழமையான வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய பொருட்களை வைத்துக்கொண்டு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருளையும் வைத்துக்கொண்டு சிவபெருமானின் சுரூபமாக திகழக்கூடிய சந்திர தரிசனத்தை நாம் காணும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் எண்ணில் அடங்காத பல மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சந்திர தரிசனத்திற்கு பல மகத்துவங்கள் இருக்கிறது. 12 மாதமும் சந்திர தரிசனம் காண்பது என்பது மிகவும் அரிது. அப்படி பார்த்து விட்டால் அதன் பலன் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று ஆன்மீக ரீதியாக நம்முடைய முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த மாதம் அதாவது வைகாசி மாதம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும்.

எப்பொழுதும் போல் ஆறு மணிக்கு வீட்டில் விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்டி வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். 06:30 மணி அளவில் திறந்த வெளிக்கு வந்து மேற்கு முகமாக பார்த்து நின்று சந்திர தரிசனத்தை காண வேண்டும். இவ்வாறு காணும் பொழுது நம்முடைய கைகளில் பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு வசம்பு துண்டையும் வைத்து சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பச்சரிசி என்பது சந்திர பகவானுக்கு உரியதாக திகழ்கிறது. வசம்பு என்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய பொருளாக திகழ்கிறது. இவை இரண்டையும் வைத்துக்கொண்டு நாம் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய வறுமை நிலை மாறி செல்வ செழிப்பு உயர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் இருக்கும் இடத்தில் மேகமூட்டம் காரணமாக சந்திர தரிசனத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை.

வானத்தைப் பார்த்து சந்திர தரிசனம் தெரிவது போல் உங்கள் மனதிற்குள் நீங்களே கற்பனை செய்து கொண்டு மனதார வழிபாடு செய்யுங்கள். என்னதான் மேகமூட்டம் இருந்தாலும் அதற்கு பின்னால் கண்டிப்பான முறையில் சந்திரன் இருப்பார் என்பதால் தான் இந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறு வழிபாடு செய்து முடித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து நம் கையில் வைத்திருக்கும் பச்சரிசி, வசம்பை போட்டு மூட்டையாக கட்டி பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சந்திர தரிசன நாள் அன்று இந்த பச்சரிசியை எடுத்து பறவைகளுக்கு தானமாக வழங்கிவிட்டு வசம்பை கால் படாத இடத்திலோ அல்லது தெய்வீக செடிகளின் அடியிலோ வைத்து விட வேண்டும்.

மறுபடியும் புதிதாக பச்சரிசி வசம்பை வைத்து சந்திர தரிசனம் செய்துவிட்டு மூட்டையாக கட்டி வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நாம் செய்து வர நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். வறுமை நிலை மாறும். செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்கும் பரிகாரம்
மிகவும் எளிதான இந்த பரிகாரத்தை முழுமனதுடனும் முழு நம்பிக்கையுடனும் செய்பவர்களுடைய வாழ்க்கையில் சந்திர பகவான் மற்றும் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைத்து வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

சற்று முன்