- Advertisement -
சமையல் குறிப்புகள்

பாரம்பரிய சுவையில் முந்திரி கொத்து இப்படி செய்யுங்க! பக்குவம் தவறவே தவறாது.

- Advertisement -

பண்டிகை நாட்களில் இந்த முந்திரி கொத்து ரெசிபியை நிறைய பேர் வீடுகளில் செய்வார்கள். சாதாரணமாக இருக்கும் நாட்களில், ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தேவை என்றால் கூட இதை செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். 15 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. ஆனால் பக்குவமாக செய்ய வேண்டும். பாரம்பரியமான இந்த முந்திரிக்கொத்து ரெசிபியை எளிமையான முறையில் பக்குவம் தவறாமல் எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 கப் அளவு பச்சை பயிறு போட்டு, வறுக்க வேண்டும். பச்சை பயிறு நிறம் மாறி பொன்னிறம் வரும் வரை வறுபட்டு வர வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். வருபட்ட பச்சைப் பயிரை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆர வைக்க வேண்டும். ஆறிய பின்பு இந்த பச்சை பயிரை மிக்ஸி ஜாரில் போட்டு கூடவே மூன்று ஏலக்காய்களை போட்டு, கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள். பச்சை பயிறு 90 சதவிகிதம் அரைபட்டால் போதும்.

- Advertisement -

அடுத்து அதே கடாயில் 1 கப் அளவு தேங்காய் துருவல், எள்ளு 2 டேபிள் ஸ்பூன், போட்டு பிரவுன் கலர் வரும் அளவிற்கு கைவிடாமல் வறுக்க வேண்டும். தேங்காய் நன்றாக வறுபடவில்லை என்றால், தயார் செய்த முந்திரிக்கொத்து சீக்கிரம் கெட்டுப் போய்விடும். வறுத்த இந்த தேங்காய், எள், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா பச்சை பயிறு பொடி அதோடு கொட்டி கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலின் வறுத்து அரைத்த பச்சை பயிறு, தேங்காய், எள்ளு சேர்த்த கலவை தயாராக உள்ளது. இந்த மூன்று பொருட்களையும் ஒரு கரண்டியை போட்டு கலந்து அப்படியே வைத்து விடுங்கள். இதில் வெல்லப்பாகு கரைசலை ஊற்றி பிசைய வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 கப் அளவு வெல்லம் போட்டு, கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைத்து, வெல்லம் லேசாக பிசுபிசு பக்குவம் வந்ததும் இந்த வெல்லம் சூடாக இருக்கும்போதே, பௌலில் இருக்கும் பச்சை பயிறு தேங்காய் துருவல் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து கலக்க வேண்டும்.

- Advertisement -

ஓரளவுக்கு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இந்த கலவையில் கையைப் போட்டு கலந்து, சூடு ஆறுவதற்குள் சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறிவிட்டால் இது உருண்டை பிடிக்க வராது. இப்போது இந்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அப்படியே ஆற வைத்து விட்டால், உருண்டைகள் எல்லாம் உடையாமல் கமர்கட்டு போல கட்டி பிடித்து வரும். இது அப்படியே இருக்கட்டும்.

இப்போது முந்திரி கொத்துக்கு, மேல் மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு அகலமான பவுலில் அரிசி மாவு 1 கப், கான்பிளவர் மாவு அல்லது மைதா மாவு உங்கள் வீட்டில் எது இருக்கிறது அது 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் கலந்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மாவை கரைக்க வேண்டும். (அரிசி மாவை கடாயில் போட்டு இரண்டு நிமிடம் வறுத்து கூட மேல் மாவு தயார் செய்யலாம்.) மாவு கொஞ்சம் கட்டி பதத்தில் தான் இருக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைத்து விடக்கூடாது.

- Advertisement -

இப்போது தயார் செய்து வைத்திருக்கும் பாசிப்பயறு உருண்டைகள் இருக்கிறது அல்லவா, அதில் மூன்றை ஒன்றாக எடுத்து இந்த மாவில் தோய்த்து சுட சுட எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்க வேண்டும். இதன் பெயரை முந்திரிக்கொத்து, அதனால் தயார் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை கொத்தாக எடுத்து தான் மாவில் விட வேண்டும். அப்படித்தான் நம்முடைய பாட்டிகளும் செய்வார்கள்.

இதையும் படிக்கலாமே: இனி சட்னி அரைக்கும் வேலை கூட உங்களுக்கு கிடையாது. இந்த ஒரு பொடி உங்க கையில இருந்தா போதும் நிமிஷத்துல சட்னி ரெடி. அட இத்தன நாளா இது தெரியாம போச்சே அப்படின்னு கண்டிப்பா யோசிப்பீங்க.

உங்களுக்கு மூன்று உருண்டைகளை ஒன்றாக எடுத்துப் போட முடியவில்லை என்றால் இரண்டு உருண்டைகளாக மாவில் தோய்த்து தோய்த்து சுட சுட எண்ணெயில் வெட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான். பாரம்பரிய சுவையில் முந்திரிக்கொத்து தயார். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -