இட்லி, தோசை போன்றவற்றுக்கு பலவகை சைடிஷ் இருந்தாலும் நாம் அதிகமாக, அதே நேரத்தில் உடனே செய்வது இந்த சட்னி மட்டும் தான். ஏனென்றால் இது தான் சுலபமாக செய்து முடிக்க முடியும், அதே சமயம் நேரமும் மிச்சமாகும். இப்போது அந்த நேரத்தையும் கூட இன்னும் மிச்சப்படுத்த, இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு சூப்பரான ரெடிமேட் சட்னி பொடி எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை -1 கப், பொட்டுக் கடலை -1/2 கப், உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு தோல் உரிக்காதது – 4, சீரகம் -1 டீஸ்பூன், கறி வேப்பிலை – 1கொத்து, புளி – சின்ன கொட்டைப் பாக்கு அளவு. உப்பு – 1 ஸ்பூன்.
செய்யும் முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான பேனை வைத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் தட்டில் கொட்டி ஆற வைத்த கொள்ளுங்கள். இது ஏற்கனவே வறுத்த வேர்க்கடலை ஆக இருந்தாலும் அரைக்கும் முன் ஒரு முறை வறுத்துக் கொள்வது நல்லது. வேர்க்கடலையை வறுத்த பிறகு அதே பேனில் பொட்டுக் கடலையும் வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து அதே பேனை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக நிறம் மாறி வாசம் வரும் வரை வறுத்து அதையும் தனியாக கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரை ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அத்துடன் புளியையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியும் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்த பிறகு காற்று போகாத ஒரு பாட்டிலில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் ரெடிமேட் சட்னி பொடி ரெடி.
உங்களுக்கு தேவைப்படும் போது இதிலிருந்து எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து தாளித்து ஊற்றி நிமிடத்தில் தயார் செய்து கொள்ளலாம். இதை அரைத்த பிறகு எப்போதும் போல தாளித்து ஊற்றி அதன் பிறகு கலந்து அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தும் ஸ்டோர் பண்ணலாம். தாளித்து வைக்கும் போது அதிக நாட்கள் பயன்படுத்த முடியாது. இந்த முறையில் வைத்தால் நமக்கு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: லேசாக பிட்டு பார்த்தாலே பஞ்சு போல சாஃப்டாக இருக்கிற இனிப்பு கொழுக்கட்டை இப்படித்தான் செய்யனுமா? ருசியான வெல்ல கொழுக்கட்டை ஈசியா செய்வது எப்படி?
இந்த ரெடிமேட் சட்னி பொடி உங்க வீட்டில் இருந்தால் டென்ஷனை இல்லாம வேலையை சட்டுனு முடிச்சிடலாம். வேலைக்கு போகும் அவசரத்தில் இருக்கும் இந்த பொடி கையில் இருந்தால் மிகவும் உதவியாகவே இருக்கும். உங்களுக்கு இந்த சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா நீங்க உங்க வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.